குடும்பம் ஒரு கதம்பம் வழி இல்லற நிகழ்வை எடுத்துரைக்க ?
Answers
Explanation:
வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற கருத்துடன், திருமணத்தின் போது, மண்டபத்துக்கு முன், வாழை மரங்களை நடவு செய்கின்றனர். 16 பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்று, 16 செல்வங்களை கருதியே வாழ்த்துகின்றனர். இல்லறத்தில், சின்ன சங்கடங்கள் தோன்றுவது, எல்லோர் குடும்பத்திலும் இயல்பான ஒன்று தான். ஆனால், அதில் விரிசல் விடும் போது, இருவரும் பிரிந்து போகிற அளவுக்கு போய் விடுகிறது.
வீட்டு வேலைகளை மனைவி தான் செய்ய வேண்டும் என்று கருதும் மனபோக்கு இருந்தால், குடும்பங்களில் என்றுமே நிம்மதி இருக்காது. சம்பாதிப்பது மட்டுமே என் வேலை என்று கருதி, முரண்டுபிடித்தாலும், சச்சரவுகளை தவிர்க்க முடியாது. சிறிய பிரச்னைகளுக்கு கூட, இன்று கோர்ட் படியேறுவதை பார்த்தால், குடும்ப வாழ்க்கை சிதைந்து போய் வருகின்றனவா? என்றும் கேட்க வைக்கிறது.
தம்பதி இருவரும், சரிசமமாக பிரித்து, வீட்டு வேலைகளை செய்யும் போது, இவர்களிடையே இணக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து, ஒன்றுபட்ட கருத்துகளோடு ஒற்றுமையாக வாழ்வதே இனிய இல்லற வாழ்க்கையின் அடையாளம். மனைவியை சந்தோஷப்படுத்தும் காரணிகளை, கணவன்மார்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். இனிய இல்லறத்தை, இனிமையாக கொண்டு செல்லக்கூடிய வழியின் முதல்படி இது.
காலையில், மனைவி எழும் முன், நீங்கள் எழுந்து ஒரு காபி போட்டு கொடுக்கலாம். துவைத்த துணிகள் மடிக்காமல் இருந்தால், கோபமடையாமல் அதை அழகாக எடுத்து மடித்து வைக்கலாம். மதியத்திலோ அல்லது இரவு வேளையிலோ, சாப்பிட்ட தட்டுகள் சுத்தப்படுத்தாமல் இருந்தால், மனைவி சொல்லும் முன்பே, நாம் கழுவி வைக்கலாம். நாம், பணி முடித்து வீட்டுக்கு செல்லும் போது, கண்ணை கசக்கும் நெடுந்தொடர்களை, பெண்கள் பார்த்துக் கொண்டிருப்பர். உங்களுக்கு பிடிக்காமல் போனாலும் கூட, வேறெந்த பணியிலாவது, நீங்கள் ஈடுபடலாம். உதாரணமாக, குழந்தைகளுடன் விளையாடுவது, புத்தகம் படிப்பது, அடுத்த நாள் சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளை நறுக்குவது. அவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் போது, ரிமோட்டை எடுத்து, உங்களுக்கு பிடித்த சேனலை மாற்றி விட வேண்டாம். இது, அவர்களுக்கு, கோபத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில், சமையலறை பக்கம் சென்று, தேவையான மளிகைப் பொருட்கள் காலியாக இருந்தால், அதை கண்டறிந்து, முன்கூட்டியை வாங்கி வைத்து விடுங்கள். விடுமுறை நாட்களில், பாதிக்கும் மேற்பட்ட வேலைகளை நீங்களே இழுத்துப் போட்டு செய்யலாம்.
சமையல் செய்ய தெரியாவிட்டாலும் கூட, மனைவியிடம் கேட்டு சமைத்து அசத்தலாம். நேரம் கிடைக்கும் போது, குடும்பத்தினரை, அவர்கள் பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். முக்கியமாக, மனைவியிடம் நேரம் ஒதுக்கி பேச வேண்டும். மனைவி ஏதாவது பேச வரும் போது, நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுங்கி விடக்கூடாது. குழந்தைகள் வளர்ப்பிலும் பல நடைமுறைகளை கற்றுக் கொள்வது சிறந்தது.
குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது, அவர்களுடன் விளையாடுவது, கதை சொல்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டால், குடும்பத்தில், உங்கள் மீதான அன்பு அதிகரிக்க வழி ஏற்படுத்தும்.
please mark me brainliest and follow me.