India Languages, asked by IrreplaceableAsh, 6 months ago

மொழிபெயர்ப்பின் செம்மைப் பண்பு குறித்து எழுதுக​

Answers

Answered by GOODBOYFF
8

Answer:

எந்த ஒரு செயலும் தனது பலனை உரிய நேரத்தில் தரும் என்பது இயற்கை விதி. ஒரு சமுதாயத்தின் உயிராக அதன் மொழி அமைகிறது. அச்சமுதாயத்தின் கருத்தோட்டம், வளர்ச்சி, கலை, இலக்கியம், பண்பாடு முதலிய எல்லாவற்றின் கொள்கலமாயும், வெளிப்படுத்தும் வாயிலாகவும் அது அமைகிறது. மக்கள் சமுதாயம் மொழிகளைப் பயன்படுத்துவதால் கருத்துப் பரிமாற்றம் போன்ற பயன்களைப் பெறுகிறது. அதுபோலவே மொழிபெயர்ப்பால் ஒரு மொழியில் உள்ள செய்தி உள்ளீடுகளும் கருத்தாக்கங்களும் மாற்றப்படும் மொழிக்குச் செல்லுகின்றன. அவ்வாறு செல்லுவதால் சமுதாயப் பயன்பாடும், மொழிப் பயன்பாடும் பெருகுகின்றன. இப்பெருக்கம் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் உலகுதழுவிய அறிவுப் பெருக்கத்திற்கும் வழிகோலும். இந்த மொழிபெயர்ப்பு, மொழியின் பயன்பாட்டில் ஒரு கூறாக அமைந்து அதை வளர்க்கிறது. இன்றைய அறிவியல் நாளைய அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படை ஆவது போல, இன்றைய மொழிபெயர்ப்பு, வருங்காலத்தில் சமுதாயத்தைப் பயனுள்ளதாக்கவும், வளர்ச்சி மிக்கதாக்கவும் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

1.3.1 பண்பாட்டு வளர்ச்சி

எந்த மொழி இலக்கியங்களாயினும், அந்த அந்தப் பண்பாட்டுத் தாக்கம் தவிர்க்க இயலாத ஒன்று. சங்க இலக்கியத்தில் ‘யாயும் ஞாயும் யாராகியரோ....’ என்ற குறுந்தொகைப் பாடலைப் பார்த்தால், அதில் நமது சமுதாயப் பண்பாடு புதைந்துள்ள நிலையைக் காண்கிறோம். ‘செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்ற வரிகளுக்கு இணையான பண்பாட்டு ஆக்கத்தை எந்த மொழி இலக்கியத்திலும் காண இயலாது. இதை மொழியாக்கம் செய்கிறபோது ‘ஒருவனுக்கு ஒருத்தி; ‘காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்’ போன்ற தமிழ்ப் பண்பாட்டு ஆழம் பிறமொழிக்கு ஊட்டப்படும் என்பதில் ஐயமில்லை.

1.3.2 இலக்கியப் பெருக்கம்

ஒருமொழியில் பல்லாயிரம் இலக்கியங்கள் இருந்தாலும் எழுதிச் சேர்க்கப்படும் ஒவ்வொரு மொழியாக்க நூலாலும் இலக்கியப் புதுமை உருவாவதுடன் இலக்கியப் பெருக்கமும் உண்டாகிறது. மலையாள எழுத்தாளர் ’வைக்கம் முகமது பஷீர்’ எழுதிய ‘பூவன் பழம்’ என்ற சிறுகதை தமிழாக்கம் செய்யப்பட்டபோது தமிழ்ச்சிறு கதை உலகில் ஒரு சலனத்தை அது ஏற்படுத்தியது.

உலகின் பல மொழிகளில் ‘பைபிளுக்கு’ அடுத்த படியாக மொழிபெயர்க்கப் பெற்றுள்ள திருக்குறளின் தாக்கம் பல மொழிகளிலும் இலக்கிய வடிவ மாற்றங்கள் உருவாகப் படியாக அமைந்தது என்பர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டதன் விளைவு பல நாடக மேடை அமைப்புகள் உருவாகின. மேலை நாட்டு இலக்கியச் சார்புதான் நமது தமிழிலக்கியத்தின் புதிய வரவுகளான புதினம், சிறுகதை போன்ற வடிவங்களுக்குப் படிநிலையாகும். வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ ஏற்படுத்திய கவிதைத் தாக்கம் தமிழ்ப் புதுக் கவிதை மாளிகைக்கு அடிக்கல் நட்டது. ஜப்பானிய ‘ஹைக்கூ’ கவிதைகள் நமது ‘ஹைக்கூ’ கவிதை வளர்ச்சிக்கு வித்திட்டது. இங்ஙனம் மொழியாக்கங்கள் இலக்கிய வளர்ச்சியில் பங்கேற்பது தவிர்க்க இயலாத உண்மையாகும்.

1.3.3 அறிவியல் மேம்பாடு

தாமஸ் ஆல்வா எடிசன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமெடீஸ், கலீலியோ போன்ற மேலை நாட்டு அறிஞர் பெருமக்களின் கண்டு பிடிப்புகள் பற்றிய செய்திகள் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றபின் அறிவியல் வளர்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. மரத்திலிருந்து கனிந்த பழம் விழுவதையும், பழத்திற்காக எறிந்த கல் நிலத்தைச் சென்றடைவதையும் கண்டு களித்த மக்கள், நியூட்டனின் இயற்பியல் விதிக்குப் பின்னர்தான் அது புவியீர்ப்புச் சக்தி என்பதை அறிந்தனர். அறிவியல் மொழி பெயர்ப்பில் சந்தத்திற்கு இடமே இல்லை. அங்கு நிறைந்திருப்பதெல்லாம் கலைச்சொல் ஆக்கம்தான்.

1.3.4 சமுதாய முன்னேற்றம்

சமுதாயம் என்பது மக்கள் கூட்டமாக வாழும் ஒரு தார்மீக அமைப்பு. இதில் பல கொடுக்கல் வாங்கல் அமைப்பு நிலைகள் இருக்கலாம் என்றாலும் வர்க்கப் போராட்ட நிலைகளும் தீர்வுகளும் பல்வேறு நிலைகளில் பல நாடுகளில் நிகழ்ந்துள்ளமையை வரலாறு சான்றளிக்கும். குறிப்பாகக் காரல்மார்க்ஸின் மார்க்சிய சமுதாயத்தின் செயல்பாடுகள் ரஷ்ய மொழியிலேயே இருந்திருந்தால் இன்று உலகளாவிய சமுதாய விழிப்புணர்ச்சி எழாமல் முடங்கிப் போயிருக்கக் கூடும். அது பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு அந்தந்த மொழி பேசும் சமுதாயங்களின் விழிப்புணர்வைப் பெருக்கியது. இதுபோலவே பிரெஞ்சுப் புரட்சி, கார்க்கியின் சிந்தனைகள் இவற்றின் மொழி பெயர்ப்புகளும் பல பெருந்தலைவர்களை உருவாக்கின என்றால் மிகையாகாது.

1.3.5 சமய வளர்ச்சி

மொழிபெயர்ப்பால் சமய வளர்ச்சி மேம்படும் என்பது யாராலும் மறுக்க இயலாத உண்மையாகும். சமண, பௌத்த, சைவ, வைணவ, சமயங்கள் நம் தாய் மண்ணுக்குச் சொந்தமானவை. கிறித்துவம், இ்சுலாமியம் போன்ற சமயங்கள் வேற்று நாடுகளில் உருவாகி வந்த படைப்புகள் எனினும் நம்மோடு ஊடாடிக் கலந்துவிட்ட சமயங்கள். கிறித்தவ சமய நூலான பைபிளின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்பன எபிரெய, கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. அவற்றை ஜேம்ஸ் அரசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னர் பல மொழிகளிலும் மொழியாக்கம் பெற்று உலகில் ஏறக்குறைய எல்லா மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப் பெற்ற நூலாக ஆயிற்று; உலகம் முழுமையும் கிறித்தவ சமயம் பரவவும் அடிப்படையாயிற்று. இப்படிச் சமய வளர்ச்சியிலும் மொழி பெயர்ப்பு முதலிடம் வகிப்பதை அறிகிறோம்.

1.3.6 அரசியல் விழிப்புணர்ச்சி

கிரேக்கத் தத்துவ ஞானியாகிய சாக்கிரடீஸ் போன்றவர்களுடைய மாபெரும் கருத்துகள் எல்லாம் அவ்வம் மண்ணிலேயே முடங்கிப் போகாத வண்ணம் காத்தவை மொழிபெயர்ப்புகளே. மொழிபெயர்க்கப்பட்ட காரணத்தால் அக்கருத்துகள் உலக அரசியல் விழிப்புணர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தன. இந்திய விடுதலைக்குக் கூடப் பல மொழி பெயர்ப்பு நூல்கள், துண்டுப் பிரதிகள் போன்றன பெருந்துணையாக அமைந்தன என்றால் மிகையாகாது. அரசியல் விழிப்புணர்ச்சி மக்களுக்குள் வேரூன்றியதால் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டு, இன்று நமது அரசியல் செம்மையும் வேகமுமாக முன்னேறி உள்ளமையைக் கண்கூடாகக் காண்கிறோம்

Similar questions