India Languages, asked by rshreesandhiya44, 6 months ago

'தொழு உரம்' பற்றி எழுதுக​

Answers

Answered by loki2106
2

Answer:

ʜᴏᴩᴇ ᴛʜɪꜱ ᴡɪʟʟ ʜᴇʟᴩ yᴏᴜ ɴᴀɴʙᴀ!!

Explanation:

வேளாண்மையில், இயற்கை உரம் (Manure) என்பது மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் குறிக்கும். இவை கரிம /சேதனப் பொருட்களாலானதாக இருப்பதனால் கரிம /சேதன உரம் அல்லது சேதனப் பசளை (Organiz Fertilizer) எனவும் அழைக்கப்படும். மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகளின் கழிவுப் பொருட்கள், அவற்றிற்கு உணவாக வழங்கப்பட்டு, கழிக்கப்பட்ட வைக்கோல், மற்றும் இலை, தழைகள், மண்ணிற்கு இயற்கையாக உரமாகக் கூடிய தாவரங்கள் போன்றவை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இயற்கை உரங்களாகும். இயற்கை உரம் இடுவதால் செடிகளுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் மண்னின் தன்மையும் மாறாது பாதுகாக்கப்படும்.விலங்குத் தொழுவங்களில் இருந்து பெறப்படும் கழிவுகள் தொழு உரம் அல்லது எரு (animal manure or farmyard manure) எனப்படும். இதில் மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, அவற்றின் சிறுநீர் போன்ற விலங்குகளின் கழிவுகளுடன், அவற்றிற்கு உணவாக வழங்கப்பட்டு மீந்திருக்கும் தாவரக் கழிவுகளும் சேர்த்துக் கொள்ளப்படும்[1]. பயிர்களுக்குத் தேவைப்படும் பல முக்கியச் ஊட்டச்சத்துக்களை எரு கொண்டுள்ளது. இது தாவரத்தின் வளர்ச்சிக்கு இடப்படும் சத்துப் பொருளாகும்.

தாவரங்கள், அவற்றின் இலை, தழைகளைக் கொண்ட பகுதிகளிலிருந்து பெறப்படும் உரமானது பசுந்தாள் உரம் (Green manure) எனப்படும். குறிப்பிட்ட ஒரு பயிர் வேளாண்மைக்கு உட்படுத்த முன்னர், மண்ணுக்கு அதிக ஊட்டம் வழங்கக்கூடிய வேறொரு பயிரை குறிப்பிட்ட நிலத்தில் இட்டு, வளர்த்துப் பின்னர், அவற்றை அதே நிலத்தில் உழுது சேர்க்கும்போது, மண்ணுக்குத் தேவையான ஊட்டம், பசுந்தாள் உரமாக வழங்கப்படும்[2]. பொதுவாக நைதரசன் ஊட்டக்கூறு அதிகமாகக் கொண்ட அவரையினத் தாவரங்கள் இதில் பயன்படுத்தப்படும்.

இவ்வாறான கழிவுகள் பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மக்கவிடப்பட்டு அல்லது சிதைமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டும் இயற்கை உரமாகப் பயிர்களுக்கு அழிக்கப்படலாம். இது மக்கிய உரம் அல்லது கூட்டெரு (Compost) என அழைக்கப்படும்.

சிலசமயம் இவ்வகையான கழிவுகளில் இருந்தோ, அல்லது சில தாவர வித்துக்களில் இருந்தோ நீரகற்றப்பட்டு, செறிவான உரம் தயாரிக்கப்படும். அது செறிவான கரிம/சேதன உரம் (Concentrated organic fertilizer) எனப்படும்.

Similar questions