வேற்றுமை என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக
Answers
Answer:
பெயர்ச்சொற்கள் உருபு ஏற்று வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமை எனப்படும்.
வேற்றுமைகள் அவ்வுருபுகளால் பெயர் பெறுகின்றன.
அவை,
எழுவாய் வேற்றுமை (முதல் வேற்றுமை)
'ஐ' வேற்றுமை -(இரண்டாம் வேற்றுமை)
'ஆல்' வேற்றுமை -(மூன்றாம் வேற்றுமை)
'கு' வேற்றுமை -(நான்காம் வேற்றுமை)
'இன்வேற்றுமை -( ஐந்தாம் வேற்றுமை)
'அதுவேற்றுமை -( ஆறாம் வேற்றுமை)
'கண்வேற்றுமை -( ஏழாம் வேற்றுமை)
'விளிவேற்றுமை -(எட்டாம் வேற்றுமை)
வேற்றுமை உருபுகள் மறைந்து(தொக்கி) வருவது வேற்றுமைத்தொகை ஆகும். வேற்றுமை, பெயர்ச் சொல்லின் பொருளை ‘செயப்படுப்பொருள்’ முதலாக வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபடுத்தும் எழுத்து அல்லது சொற்கள், “வேற்றுமை உருபுகள்” என்றழைக்கப்படுகின்றன. இரண்டு சொற்களுக்கிடையே இவ்வுருபுகள் மறைந்து வருவதே ‘வேற்றுமைத்தொகை’. எட்டு வேற்றுமைகளில் முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைகளுக்கு உருபு இல்லை வேற்றுமை உருபுகள் 6 ஆகும்.
வேற்றுமை வகைகள்:
முதல் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
ஏழாம் வேற்றுமை உருபு
எட்டாம் வேற்றுமை உருபு
முதல் வேற்றுமை:
அகிலன் வந்தார் என்பது ஒரு தொடர். இத்தொடரில் அகிலன் என்பது எழுவாய் ஆகும். இந்த எழுவாய், வந்தார் என்னும் பயனிலையை ஏற்று இயல்பாக வருகிறது. இந்த எழுவாய் வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றுள் ஒன்றினை பயனிலையாகக் கொண்டு முடியும். இவ்வாறு வருவது எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை எனப்படும். குறிப்பாக இதற்கு உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை:
உயிர் எழுத்தான ஐ இரண்டாம் வேற்றுமை உருபு. உதாரணத்திற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரக்கன்றை நட்டார். இத்தொடரில் அப்துல் கலாம் என்பது எழுவாய். மரக்கன்று என்பதும் பெயர்ச்சொல். அது ஐ என்னும் உருபை ஏற்று செயப்படுபொருளை உணர்த்துகிறது. இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை செயப்படு பொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை எனப்படும். இதனை செயப்படுபொருள் வேற்றுமை எனவும் வழங்குவர். இதன் உருபு ஐ ஆகும்.
மூன்றாம் வேற்றுமை:
ஆல், ஆன், ஒடு, ஓடு என்பது மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை தம்மை ஏற்ற பெயர் பொருளை கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி பொருளாக வேறுபடுத்தும். இவற்றுள் ஆல், ஆன் உருபுகள் கருவி, கருத்தா ஆகிய இரு பொருள்களிலும் வரும். கருவி முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
நான்காம் வேற்றுமை:
மெய்யெழுத்தான கு நான்காம் வேற்றுமை உருபு ஆகும். இது கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல் , பொருட்டு, முறை, எல்லை என பல பொருளில் வரும்.
ஐந்தாம் வேற்றுமை:
இல், இன் என்பன ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை தம்மை ஏற்ற பெயர் பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப்பொருளாக வேறுபடுத்தும்.
ஆறாம் வேற்றுமை:
அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை உருபுகள். அது, ஆது என்பன ஒருமைக்கும் அ என்பது பன்மைக்கும் வரும். உருபுகள் கிழமைப் பொருளில் வரும்.
ஏழாம் வேற்றுமை:
கண், கால், மேல், கீழ், இடம், இல், இவை ஏழாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.
எட்டாம் வேற்றுமை:
படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயர் ஆக்கி அழைக்க இந்த வேற்றுமை பயன்படுகிறது. இதனை விளி வேற்றுமை என்று வழங்குவர்.