அரிச்சந்திர புராணம் உணர்த்தும் அரிச்சந்திரனின் வாய்மை நிலை
Answers
Explanation:
அரிச்சந்திரன் (ஹரிச்சந்திரன்) இந்தியத் தொன்மக் கதை ஒன்றின் கதைத் தலைவன். இக் கதைகளின்படி இவர் சூரிய குலத்தின் 28 ஆவது அரசன் ஆவார். இவர் தனது வாழ்வில், சொன்ன சொல் தவறாமை, வாய்மை என்னும் இரண்டு ஒழுக்கங்களையும் இறுக்கமாகக் கடைப்பிடித்து வந்தார். இவரது வாழ்க்கை இந்தியப் பண்பாட்டு விழுமியங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுவதால், பள்ளிப் புத்தகங்களில் இவரது வரலாறு இடம்பெறுவது உண்டு. இந்தியாவில் மிகவும் பெயர் பெற்ற இவரது கதையை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான நூல்களும், நாடகங்களும், திரைப்படங்களும் பல்வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டு உள்ளன. தனது கொள்கைகளில் உறுதியாக நின்றமையால் வாழ்க்கையில் அவர்அடைந்த துன்பங்களையும் இறுதியில் அதனாலேயே அவர் உண்மையின் சின்னமாகப் போற்றப்படுவதையும் அரிச்சந்திரனது கதை எடுத்துக் கூறுகிறது. இளம் வயதில் தான் பார்த்த அரிச்சந்திர நாடகமே தனக்கு வாய்மையின் உயர்வை உணர்த்தியதாய் அண்ணல் காந்தியடிகள் தனது வாழ்க்கை வரலாறான “சத்திய சோதனை” நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Answer: