தாமிரத்தின் பயன்கள எழுதுக
Answers
Answer:
தாமிரம்(II) ஆக்சைடு (Copper(II) oxide) என்பது CuO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குப்ரிக் ஆக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். தாமிரத்தினுடைய முதன்மையான ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். Cu2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் குப்ரசு ஆக்சைடு மற்றொரு முதன்மையான தாமிர ஆக்சைடாகும்.
இந்த கருப்பு நிற திண்மமாக இந்த கனிம வேதியியல் சேர்மம் காணப்படுகிறது. ஒரு கனிமமாக, இது டெனோரைட் என்று அழைக்கப்படுகிறது.இந்த சேர்மம் செப்பு சுரங்கத்தின் ஒரு தயாரிப்பு. மேலும் இது செம்பு கொண்ட பல பொருட்கள் மற்றும் ரசாயன கலவைகளுக்கு முன்னோடியாக தயாரிக்கப்படும்.[1]
செப்பு (Copper) எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இத்தனிமம் செம்பு எனவும் தாமிரம் எனவும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu ஆகும். இதன் அணு எண் 29 ஆகும். மிகவும் மென்மையானதாக, தகடாக அடிக்கக்கூடியதாகவும், கம்பியாக நீட்டக்கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் கடத்துத்திறன் கொண்டதாகவும் தாமிரம் விளங்குகிறது. இந்த மாழையின் புத்தம்புதிய மேற்பரப்பு சிவந்த நிறத்தில் இருப்பதால் இதை செம்பொன் என்றும் அழைக்கிறார்கள். வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும் ஒரு கடத்தியாக மக்கள் தாமிரத்தைப் பயன்படுத்துகின்றனர். கட்டுமானப் பொருளாகவும் பல்வேறு கலப்புலோகங்களின் பகுதிப் பொருளாகவும், நாணயங்கள் தயாரிப்பிலும் வெப்ப மின்னிரட்டை போன்ற வெப்ப அளவீட்டுக் கருவிகள் தயாரிப்பிலும் தாமிரம் பயன்படுகிறது
மின்சார கம்பியாக (60%), கூரை மற்றும் குழாயமைத்தல் (20%), மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் (15%). பித்தளை மற்றும் வெண்கல உலோகக் கலவையாக பயன்படுவது தாமிரத்தின் முக்கியப் பயன்பாடுகள் ஆகும். சமையல் பாத்திரங்கள், கொதிகலன்கள், நீராவிக் குழாய்கள், மின்கம்பி, மின்வடம், மின்வாய், போன்றவைகள் செய்யவும் செம்பு பயன்படுகின்றது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்தான வேதிப் பொருட்களோடு தொடர்புடைய கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு இரும்பைக் காட்டிலும் செம்பு நற்பயன் அளிக்கிறது. இரும்பைப் பயன்படுத்தும் போது உராய்வினால் ஏற்படும் தீப்பொறி உண்டாக்கும் விபத்து இதனால் தவிர்க்கப்படுகின்றது பெரும்பாலும் தாமிரம் தூயநிலை உலோகமாகவே பயன்படுத்தப்படுகிறது. கடினத்தன்மை மாற்றம் தேவைப்படும் நேரங்களில் மட்டும் கலப்புலோகமாக பயன்படுத்தப்படுகிறது. படகுகளின் அடிப்பகுதியைப் பாதுகாக்க தாமிரச் சாயம் பூசி பாதுகாக்கிறார்கள். உணவு கூட்டுப்பொருளாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது