History, asked by lakshmiannasamy123, 5 months ago

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை அவை? யாவை?​

Answers

Answered by loki2106
11

Take it nanba!

முதலெழுத்து என்பது உயிரும் மெய்யும். இதில் உள்ள முதல் என்னும் சொல் "முதலை வைத்துப் பொருளீட்டு" என்னும் சொற்றொடரில் உள்ள முதல் போன்றது. ஆதி பகவன் முதற்றே உலகு என்பதில் உள்ள முதல் என்பதும் இதே பொருளைக் கொண்டது. இது கால முதன்மை கொண்ட மூலதனம்.

மொழிமுதல் எழுத்து என்பதில் உள்ள முதல் இட முதன்மையைக் காட்டும். முதலில் நிற்கிறான். அகர முதல எழுத்தெல்லாம் என்பனவற்றிலுள்ள முதல் போன்றது. இது இட முதன்மை.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மொழிமரபு என்னும் இரண்டாவது இயலில் கூறப்படும் செய்திகளில் மொழிமுதல் எழுத்துகள் பற்றிய செய்தியும் ஒன்று.

பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக்கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவது சொல்லாகிறது. தமிழ் சொற்களில் முதலில் வரும் எழுத்துகள் மொழி முதல் எழுத்துகள் எனப்படுகின்றன. அவை என்பது இங்குக் கூறப்படுகிறது. இவற்றின் மூலம் புணர்ச்சியில் எந்த எழுத்து வரும்போது என்ன நிகழும் என்று காணமுடியும்.

Explanation:

12 உயிரெழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1. அடை , 2. ஆடை, 3. இடை, 4. ஈயம், 5. உரல், 6. ஊர்தி, 7. எழு , 8. ஏணி, 9. ஐவனம் , 10. ஒளி, 11. ஓளி 12. ஔவிம்

மெய்யெழுத்து மொழிமுதலில் வராது. உயிரமெய் எழுத்தாகத்தான் வரும்.

க வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1.கலை 2.காளி , 3.கிளி, 4.கீரி, 5.குடி, 6.கூடு, 7.கெண்டை, 8.கேழல், 9.கைதை , 10.கொண்டல் , 11.கோடை , 12.கௌவை

மொழிக்கு முதலில் வரும் தொகு

1.தந்தை, 2.தாடி, 3.திற்றி , 4.தீமை, 5.துணி, 6.தூணி , 7.தெற்றி , 8.தேவர், 9.தையல் , 10.தொண்டை , 11.தோடு , 12.தௌவை

ந வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1.நடம், 2.நாரை, 3.நிலம், 4.நீர், 5.நுழை, 6.நூல், 7.நெய்தல், 8.நேயம், 9.நைகை, 10.நொய்யன, 11.நோக்கம், 12.நௌவி

ப வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1.படை, 2.பாடி , 3.பிடி, 4.பீடம் , 5.புகழ், 6.பூமி , 7.பெடை, 8.பேடி, 9.பைதல் , 10.பொன், 11.போதகம் , 12.பௌவம்

ம வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1.மடம், 2.மாடம், 3.மிடறு, 4.மீனம் , 5.முகம், 6.மூதூர், 7.மெலிந்தது, 8.மேனி, 9.மையல், 10.மொழி, 11.மோதகம் , 12.மௌவல் [31]

ச வரிசையில் 9 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (ச, சை, சௌ வராது) தொகு

1.சாலை, 2.சிலை, 3.சீறுக, 4.சுரும்பு , 5.சூழ்க, 6.செய்கை, 7.சேவடி, 8. சொறிக , 9.சோறு

வ வரிசையில் 8 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (வு, வூ, வொ, வோ வராது) தொகு

1.வளை [m, 2.வாளி , 3.விளரி , 4.வீடு, 5.வெள்ளி, 6.வேர், 7.வையம் , 8.வௌவு [38]

ஞ வரிசையில் 3 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (ஞா, ஞெ, ஞொ) தொகு

1.ஞாலம், 2.ஞெகிழி , 3.ஞொள்கிற்று

ய வரிசையில் 1 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (யா) தொகு

1.யான்

குற்றியலுகரம் 1 தொகு

1.நுந்தை (இது முறைப்பெயர். உன் தந்தை எனபது இதன் பொருள். இச் சொல்லின் முதலெழுத்தை இதழ் குவியாமல் ஒலித்தால் அப்போது அச்சொல் குற்றியலுகரம். இச்சொல்லையே இதழ் குவிய ஒலித்தால் அப்போது அச்சொல்லின் முதலெழுத்து முற்றியலுகரம்.

(இடைச்சொல் ஙகரம்) உரையாசிரியர்கள் இதனைக் கணக்கில் கொள்வதில்லை தொகு

'ங' எழுத்து மொழிக்கு முதலில் வராது. எனினும் தனிப்பொருள் தரும் துணைப்பெயராக வருவதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் இதற்கு வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம், அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் என்னும் எடுத்துக்காட்டுகளைத் தந்துள்ளார்.

நன்னூல் 'ங' எழுத்தை மொழிமுதாகும் எழுத்தோடு இணைத்துள்ளது.

Similar questions