English, asked by abinayav398, 6 months ago

பண்பாட்டை பாதுகாப்போம் கட்டுரை​

Answers

Answered by loverboy0001
28

பண்பாட்டுப் பாரம்பரியம்

முன்னுரை

இந்தியாவில் பிறக்கும் குழந்தை பல்லாயிரம் ஆண்டுகளின் பண்பாட்டுப் பாரம்பரியப் பின்னணியில் பிறந்து வளர்கின்றது. இந்தியா பல மொழிகள் பேசும், வேறுபட்ட பல கலாச்சாரங்களைக் கொண்ட பல இன மக்கள் வாழும் நாடு ஆகும். பல்வேறு கலைகள், இசை, நாட்டியம், நாடகம் ஆகியவற்றில் சிறப்புப் பெற்ற கலைவாணர்கள், இசைஞானிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் போன்றோர் பலர் வாழ்ந்த பூமியாகும்.

சமுதாயமும் பண்பாடும்

பண்பாடு என்பது சமுதாயம் வாழும் முறையை விளக்குவது. இது உணவு உட்கொள்ளும் முறை, ஆடைகள் அணியும் விதம், மொழியாளும் திறன், அறிவுடைமை, விளையாட்டுத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கியது. மனிதனுடைய பண்பாட்டைப் பின்வரும் காரணிகள் தீர்மானிக்கின்றன. எனவே பண்பாடு என்பது தனிமனிதனின் அல்லது ஒரு குழுவினரின் எண்ணங்களாலும் செயல்களாலும் அமையும்

பண்பாட்டின் வகைப்பாடு

பண்பாடு என்பது இயற்கையின் மீதும், தன் மீதும் மனிதன் கொண்டிருக்கும் கட்டுப்பாடு, மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், மறைவிடம், ஆன்மீகம், மொழி, இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது என்று எல்வுட் மற்றும் பிரெளன் (ElWood and Brown) ஆகியோர் கூறுகின்றனர். இவர்கள் பொருள்சார் பண்பாடு, பொருள்சாராப் பண்பாடு எனப் பாகுபடுத்தி ஆய்கின்றனர்.

பொருள் சார்ந்த பண்பாடு

மனிதர்கள் உருவாக்கும் கட்டுமானப் படைப்புகள், வசதிகள், வாய்ப்புகள் கருவிகள் இயந்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், அவற்றால் கிடைக்கும் நிம்மதியால் நடைமுறை, பழக்கவழக்கங்களால், இயல்புகளால் நன்மைகளால் மனிதர்கள் பண்பட்டவர்களாக வாழ்கின்றனர் இது பொருள் நலம் சார்ந்த பண்பாடு எனப்படுவதாகும்.

பண்பாட்டு ஒற்றுமையை வளர்க்கும் வழிகள்

பலவிதமான கலாச்சாரங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், உடை, உணவு பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள் ஆகியவற்றில் இந்திய மக்கள் வேறுபட்டு இருப்பினும் ஆன்மீக உணர்வு, எளிய வாழ்வு, உயரிய சிந்தனை, விருந்தோம்பல், கலை உணர்வு, அழகுணர்வு, சமயச் சார்பற்ற தன்மை, மக்களாட்சி ஆகியவற்றில் இந்தியர்கள் என்ற உணர்வும், ஒற்றுமையும் பெற்று வாழ்ந்து உலகிற்கு முன்னோடியாக வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்கிறோம். இப்பண்பாட்டு ஒற்றுமையை பாடப்பொருளுடன் இணைத்தும், பிணைத்தும் ஆசிரியர்கள் கற்றல் அனுபவங்களாக்கி வகுப்பில் வழங்க வேண்டும். பின்வரும் வழிகளையும் பின்பற்றலாம்.

Similar questions