ஆண்டாளின் கனவுக் காட்சிகளை ஏழுதுக
Answers
Answer:
ஆண்டாளின் கனவு காட்சிகளை எழுதுக;
ஆழ்வார்கள் பாடிய பாடலின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். இத்தொகுப்பில் ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகும். நாச்சியார் திருமொழி மொத்தம் 140 பாடல்களைக் கொண்டது.
அதிரப் புகுந்தது
ஆடும் இளம் பெண்கள் கைகளில் ஆதவனை போன்ற ஒளியினை உடைய விளக்கையும், கலசத்தையம் உடைய ஏந்தியவாறு உள்ளனர்.
வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துக் கொண்டு பூமி அதிர நடந்து வருவதாக ஆண்டாள் கனவு கண்டாள்.
அதிரப் புகுத கனாக் கண்டேன் என்ற வரியில் ஆண்டாளின் கனவில் கண்ணன் அதிரப் புகுந்தார்.
பந்தலில் புகுந்தது
மத்தளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தனர். வரிகளை உடைய சங்குகளை ஊதுகின்றனர்.
அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனும் ஆகிய கண்ணன் முத்துக்களை உடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலில் புகுந்தான்.
என்னை திருமணம் செய்து கொள்கிறான் என ஆண்டாள் தன் கனவில் கண்ணனை கண்டதை கூறுகிறாள்.