India Languages, asked by nivetha14, 6 months ago

கடிதம்.
வரவேற்பு மடல் எழுதுக.

சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்ததெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு மடல் ஒன்றை எழுதுக​

Answers

Answered by kamilkaja
11

Answer:

முன்னுரை

சுற்றுச்சூழல் எனப்படுவது நாம் வாழ்கின்ற இந்த பூமியில் எம்மை சூழ்ந்து காணப்படுகின்ற இயற்கை அரண் எனலாம். இந்த இயற்கை சூழல் சமநிலையை இழந்து விட்டால் இங்கு எந்த உயிரினங்களும் வாழ முடியாது போய்விடும்.

இயற்கை சூழலை பாதுகாத்தல் எனப்படுவது எமது சுற்றாடலை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகள் ஆகும். மனிதர்களினுடைய மோசமான செயல்களால் பாதிக்கப்படுகின்ற இயற்கை சூழலை பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் இன்று உலகம் உள்ளது.

இக்கட்டுரையில் சூழலின் முக்கியத்துவம் அவற்றை பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலின் அவசியம்

சுற்றுச்சூழல் ஏன் அவசியமானது? நாம் சுவாசிக்க காற்று, பருக நீர், உண்ண உணவு, உடுத்திக்கொள்ள ஆடை, வாழ்வதற்கு வீடு என்று இங்கே நாம் வாழ இயற்கை சூழலையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.மனிதர்கள் மாத்திரமன்றி பல்லாயிரகணக்கான உயிரினங்கள் இந்த சூழலை நம்பி வாழ்கின்றன. ஆக நாம் சூழலை பாதுகாக்க வேண்டியது மிக அவசியமாகின்றது.

சூழலை அழித்தல் எமது அழிவிற்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதாக அமைகிறது. அது போல மனிதனால் ஒருபோதும் இயற்கையை வென்றுவிட முடியாது என்பது தெளிவான உண்மை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழலை அழிவடையாமல் பாதுகாத்தல்

சூழலை பாதுகாக்க மனிதன் ஒன்றும் பெரிய பிரயத்தனங்களை செய்ய வேண்டியதில்லை. மனித நடவடிக்கைகளான காடழித்தல், பாரிய கைத்தொழில் நடவடிக்கைகள், சுவட்டு எரிபொருள் அகழ்வுகள், அணு ஆயுத உற்பத்திகள் இது போன்ற இயற்கைக்கு முரணான செயற்பாடுகளை நிறுத்தினாலே போதும் இயற்கை தன்னை தகவமைக்கும் ஆற்றல் கொண்டது.

அது தன்னையும் பிற உயிர்களையும் பாதுகாக்கும் சமநிலையாக வைத்துக்கொள்ளும். இதனை கண்டுகொள்ளாமல் இயற்கையை மனிதன் அழிப்பதனால் தான் புவி வெப்பமடைதல், பச்சைவீட்டு விளைவு, காலநிலை மாற்றம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இன்று மனிதர்கள் எதிர்கொள்ளும் எல்லா இயற்கை சமநிலை குழப்பங்களுக்கும் சூழல் பாதுகாக்கப்படாமையே காரணமாகும்.

அழிவடைந்தவற்றை மீளஉருவாக்கல்எது எவ்வாறாக இருந்தாலும் மனித நடவடிக்கைகளால் சூழல் வெகுவாக அழிக்கப்பட்டு விட்டது. மிக அழகானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்த சூழலை மீள கட்டமைக்க வேண்டிய பொறுப்பு இன்று மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதற்காக உலகநாடுகள் பலவும் மீள் காடாக்கம், காற்று சுத்திகரிப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, பச்சைவீட்டு வாயுக்கள், காபன் வாயுக்கள் வெளியேற்றம் போன்றனவற்றை குறைத்தல், கழிவகற்றல் முகாமைத்தவம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அழிவின் விளிம்பில் இருக்கின்ற இயற்கை சூழலை பாதுகாத்து மீள கொண்டுவர முயற்சிகளை எடுக்கின்றன.

கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து, நோர்வே, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் சூழலை பாதுகாப்பதில் முன்னோடியான நாடுகளாக காணப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள்

உலகளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சர்வதேச அளவில் இயங்குகின்ற அமைப்புக்கள் இருக்கின்றன. அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த மாநாடுகளை நடாத்துகின்றன.

உலக நாடுகளுக்கு சூழல்பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. உதாரணமாக UNEP, UNESCO, Bird Life International, WWF, IUCN, IPCC போன்ற அமைப்புகள் உலகில் சூழல் பாதிப்புகள் தொடர்பான தரவுகளை கொண்டு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னின்று எடுத்து வருகின்றன.

சூழல் பாதுகாப்பு சட்டங்கள்

இந்தியாவில் சூழல் பாதுகாப்பு மற்றும் தொடர்பான சட்டம் 1986 இல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் 253 ஆவது பிரிவின் கீழ் நடைமுறையில் உள்ளது.

இது ஜக்கிய நாடுகள் சபையின் சுற்றுசூழலை பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவுகளை செயற்படுத்த நிறைவேற்றப்பட்டது.

Explanation:

please mark as brainlist

Similar questions