நெடுவினா
நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழ
நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
Answers
Answer:
பாராட்டுரை
முன்னுரை
பாராட்டுகள்
மறுசுழற்சி
நோய்கள்
சிந்தனைத்திறன்
தீமைகள்
விழிப்புணர்வு பாடல்
முடிவுரை
முன்னுரை :
எங்கள் பள்ளி ஆண்டு விழாவில் பொம்மலாட்டம் நடைபெற்றது . இதில் நெகிழிப் பைகளில் தீமைகளைக் குறித்து பொம்மலாட்டக் கலைஞர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எடுத்துக் கூறியது பாராட்டுக்குரியது .
பாராட்டுகள் :
நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் நிலம் , நீர் , காற்று மாசுபடுவதைப் பற்றியும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் பொம்மலாட்டத்தின் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்குப் பாராட்டுகள் .
நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவது உலகம் முழுவதும் தீங்கிழைக்கும் பிரச்சனையாக உள்ளது . இதனை பள்ளி மாணவர்களிடையே பொம்மலாட்டக் கலைஞர்களால் நடத்திக் காட்டும் பொழுது மாணவர்களால் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்துப் புரிந்து கொள்ள முடிந்தது .
மறுசுழற்சி :
நெகிழிப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகளையும் , அதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறியது மிகவும் பாராட்டுக்குரியது .
points ;
நோய்கள்
நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களால் மனிதர்களுக்கு மூச்சுத் திணறல் , குடல்புண் , செரிமானக்கோளாறு , சிறுநீரகக் கோளாறு போன்ற பல்வேறு விதமான நோய்களை உண்டாக்குவதை பொம்மலாட்டத்தின் வழியாக எடுத்துக் கூறியது வியப்புக்குரியது .
பொம்மலாட்டத்தில் நெகிழிப்பை பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் மூலம் வயிற்று வலி ஏற்பட்டதை நடித்துக் காட்டியது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .
சிந்தனைத்திறன்
நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பொம்மலாட்ட கலைஞர்கள் தெளிவாக நடித்துக் காட்டியது மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தியதற்கு பாராட்டுகள் .
தீமைகள்
நெகிழிப்பைகள் நிலத்தில் மண்ணுடன் மக்குவதற்கு 100 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்ற பொம்மலாட்டச் செய்தி பாராட்டுக்குரியது .
எத்தனையோ கலைநிகழ்வுகள் இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி , நெகிழிப்பைகளின் தீமைகள் குறித்து பொம்மலாட்டம் நிகழ்வு நடத்தியது மிகவும் பாராட்டுக்குரியது .
விழிப்புணர்வு
நெகிழிப்பைகளின் தீமைகள் குறித்து சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என பொம்மலாட்டத்தின் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
பாடல்
இறுதியாக பொம்மலாட்டத்தில் விழிப்புணர்வு பாடல் மிகவும் கவர்ந்தது .
" நெகிழிப்பையே போய்விடு
நித்தம் சுவாசம் தந்திடு -
காற்றே மாசைக் குறைத்திடு
கவலையை முழுதாய் மறந்திடு !
காகிதம் , துணியை எடுப்போமே
இன்பம் பொங்க வாழ்வோமே !"
முடிவுரை
மாணவர்கள் நெஞ்சங்களில் நெகிழிபைகள் பயன்படுத்தக்கூடாது என்பது ஆழமாகப் பதிந்தமைக்கு மிகவும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
நன்றி !
Mark me as a brainliest
பாராட்டுரை
முன்னுரை :
எங்கள் பள்ளி ஆண்டு விழாவில் பொம்மலாட்டம் நடைபெற்றது . இதில் நெகிழிப் பைகளில் தீமைகளைக் குறித்து பொம்மலாட்டக் கலைஞர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எடுத்துக் கூறியது பாராட்டுக்குரியது .
பாராட்டுகள் :
நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் நிலம் , நீர் , காற்று மாசுபடுவதைப் பற்றியும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் பொம்மலாட்டத்தின் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்குப் பாராட்டுகள் .
நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவது உலகம் முழுவதும் தீங்கிழைக்கும் பிரச்சனையாக உள்ளது . இதனை பள்ளி மாணவர்களிடையே பொம்மலாட்டக் கலைஞர்களால் நடத்திக் காட்டும் பொழுது மாணவர்களால் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்துப் புரிந்து கொள்ள முடிந்தது .
மறுசுழற்சி :
நெகிழிப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகளையும் , அதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறியது மிகவும் பாராட்டுக்குரியது .
மறுசுழற்சி :
நெகிழிப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகளையும் , அதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறியது மிகவும் பாராட்டுக்குரியது .
நோய்கள்:
நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களால் மனிதர்களுக்கு மூச்சுத் திணறல் , குடல்புண் , செரிமானக்கோளாறு , சிறுநீரகக் கோளாறு போன்ற பல்வேறு விதமான நோய்களை உண்டாக்குவதை பொம்மலாட்டத்தின் வழியாக எடுத்துக் கூறியது வியப்புக்குரியது .
பொம்மலாட்டத்தில் நெகிழிப்பை பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் மூலம் வயிற்று வலி ஏற்பட்டதை நடித்துக் காட்டியது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
சிந்தனைத்திறன்:
நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பொம்மலாட்ட கலைஞர்கள் தெளிவாக நடித்துக் காட்டியது மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தியதற்கு பாராட்டுகள் .
தீமைகள்:
நெகிழிப்பைகள் நிலத்தில் மண்ணுடன் மக்குவதற்கு 100 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்ற பொம்மலாட்டச் செய்தி பாராட்டுக்குரியது .
எத்தனையோ கலைநிகழ்வுகள் இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி , நெகிழிப்பைகளின் தீமைகள் குறித்து பொம்மலாட்டம் நிகழ்வு நடத்தியது மிகவும் பாராட்டுக்குரியது
விழிப்புணர்வு:
நெகிழிப்பைகளின் தீமைகள் குறித்து சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என பொம்மலாட்டத்தின் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
பாடல்:
இறுதியாக பொம்மலாட்டத்தில் விழிப்புணர்வு பாடல் மிகவும் கவர்ந்தது .
" நெகிழிப்பையே போய்விடு
நித்தம் சுவாசம் தந்திடு -
காற்றே மாசைக் குறைத்திடு
கவலையை முழுதாய் மறந்திடு !
காகிதம் , துணியை எடுப்போமே
இன்பம் பொங்க வாழ்வோமே !"
முடிவுரை: