வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வுகளின் தேவை குறித்த
உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.
Answers
தொல்லியல் அகழாய்வு செய்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ஆகும்.
அகழாய்வு வரலாறு முழுமைபெற உதவுகிறது. அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமின்றி நம் வரலாற்றையும் உணர்த்துகின்றன.
அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழைய தலைமுறையைப் பற்றித் தெரிந்து என் செய்வது? செல்லிடப்பேசிக்குள்ளே உலகம் சுற்றும் வேளையில் அகழாய்வில் கிடைக்கும் செல்லாக்காசுகள் வந்தென்ன செய்ய முடியும்? மடிக்கணினி மலைக்கவைக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு மண் ஓடுகள் இறந்தோரைச் சுமந்த மண்தாழிகள் கண்டறிந்து என்ன சாதிக்க முடியும்? இவ்வாறு இருக்க, அகழாய்வு என்ன செய்ய இருக்கிறது?
அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டன.
நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன.
I hope this helps you
I hope this helps youplease give brainliest for my answer and follow me
are you from Tamil Nadu, India.
are you from Tamil Nadu, India.by giving brainliest for my answer , I will think that you are from Tamil Nadu.