India Languages, asked by candy127, 5 months ago

“தொட்டனைத்தூறும்மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு.” என்கிறார் வள்ளுவர். மணற்கேணி தோண்டுவதற்கு ஏற்ப நீர் சுரக்கும்.அதுபோல் கற்க கற்க அறிவு வளரும்.இத்தகைய அறிவைப் பெற பெரிதும் துணை புரியும் நூலகம் பற்றி இக்கட்டுரை யில் காண்போம்.
நூலகங்களின் தேவை:
“ஆளில்லா ஊருக்கு அழகு பாழ்” என்பது பழமொழி. “நூலகம் இல்லா ஊருக்கு அறிவு பாழ்” என்பது புது மொழி.அன்றாட நிகழ்வுகளை அறியவும்,இலக்கியம்,வரலாறு,பொது அறிவு,அறிவியல்,என அறிவார்ந்த படைப்புகளை அள்ளிப்பருக உதவும் அறிவுத்தடாகம் தான் நூலகம்.ஒரு புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம் என்பர்.
.நூலகங்களின் வகைகள்:
தேசிய நூலகங்கள்,மாவட்ட,மைய, பொது நூலகங்கள்,பகுதி நேர மற்றும் நடமாடும் நூலகங்கள்,ஊர்ப்புறநூலகம்,தனியார் நூலகம் எனப்பலவகைகள் உள்ளன.
நூலகங்களில் படிக்கும் முறை :
“ நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு “
என்றார் ஔவையார்.நாளிதழ்கள்,வார இதழ்கள்,தமிழ் மற்றும் ஆங்கில கதைநூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள்,
சங்க இலக்கிய நூல்கள்,கவிதைத்தொகுப்புகள், மருத்துவம்,பொறியியல் போன்று துறைவாரியாக நூல்கள் அடுக்கப்பட்டிருக்கும்.
நூலகங்களில் அமைதியாகப்படிக்க வேண்டும். நூலகர் கூறும் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.
புத்தகங்களை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைக்க வேண்டும்.
பல்வகைநூல்நிலையங்கள்:
சென்னைகோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய அண்ணா நினைவு நூல் நிலையம்,கன்னிமாரா நூலகம்,டாக்டர் உவேசாநூலகம்,மற்றும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையம் போன்றவை மிகவும் புகழ் பெற்றவையாகும்.
முடிவுரை:
“ஆயிரம் புத்தகங்கள் வாசித்தவன் ஒருவன் இருந்தால்காட்டுங்கள்.அவனே எனது வழிகாட்டி.”என்றார் ஜூலியஸ் சீசர்.
புத்தகங்கள் இல்லா வீடு சாளரங்கள் இல்லா சத்திரம் போன்றது என்பர்.
இவ்வாறு,நமது அறிவை வளர்த்துக் கொள்ள உற்ற துணைவன் நூலகங்கள் என்பதைக் கருத்தில் கொள்வோமாக!.​

Answers

Answered by parijatdwary
1

Answer:

sorry cannot understand this language

Similar questions