எட்டுத்தொகை பத்துப்பாட்டு (வல்லின மெய்யிட்டு எழுதுக)
Answers
Answer:
த் ப்
Explanation:
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் இறுதியில் ஒரு வல்லின எழுத்து சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
வல்லெழுத்து மிகுமிடங்கள்
அ,இ,உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் 'எ' என்னும் வினாவெழுத்தின் பின்னும் மிகும்.
அப்பையன், எச்சிறுவன்?
அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு, வினாத் திரிபுகளின் பின் மிகும்.
அந்தப் பையன், எந்தக் குதிரை?
அப்படி,இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் மிகும்.
இப்படிச் சொன்னான்.
அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பின் மிகும்.
எங்குச் சென்றனை?
இனி, தனி என்னும் சொற்களின் பின் மிகும்.
இனிச் செய்யலாம். தனிக் கட்டடம்.
வேற்றுமைப் புணர்ச்சியில்
இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும்.
வீட்டைக் கண்டேன், நாட்டைக் காப்பாற்று.
நான்காம் வேற்றுமை விரியில் மிகும்.
கடைக்குப் போனான், அவனுக்குக் கொடுத்தான்.
ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப்பெயர்களின் பின் மிகும்.
புலித்தலை, நாய்க்குட்டி.
ஏழாம் வேற்றுமைத் தொகையில் மிகும்.
மனைப் பிறந்தாா், சென்னைப் பல்கலைக்கழகம்.
அல்வழிப் புணர்ச்சியில்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் மிகும்.
ஓடாக்குதிரை, பாடாப் பாட்டு.
பண்புத்தொகையில் மிகும்.
இனிப்புப் பண்டம், வட்டப்பலகை.
இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் மிகும்.
ஆவணித் திங்கள், சாரைப்பாம்பு.
அரை,பாதி, எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்ச்சொற்களின் பின் மிகும்.
அரைப் பங்கு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.
உவமைத்தொகையில் மிகும்.
மலர்க்கை. தாமரைப்பாதம்
ஆய், போய் என்னும் வினையெச்சச் சொற்களின்பின் மிகும்.
போய்க் கண்டேன். நன்றாய்ச் சொன்னாய்.
இகர, அகர ஈற்று வினையெச்சங்களின் பின் மிகும்.
தேடிப் பார்த்தேன். தேடப் போனேன்.[1]