சூரியகாந்திப்பூ சூரியனை நோக்கித் திரும்புவதற்கு அந்தப்பூவில் உள்ள
"போட்டோட்ரோபிசம்" என்ற இயக்கம் தான் காரணம். இந்த இயக்கத்திற்குச்
சூரியனின் ஒளிக்கதிர் மிகவும் அவசியம். இதனால் இந்தப்பூ கிழக்கு, மேற்கு
திசையைக் காட்டக்கூடியதாக உள்ளது. இதேபோல் சில்பியம் லேசினியேட்டம்
என்ற செடியும் திசைகாட்டும் வேலை செய்கிறது. இந்தச்செடி வட ஆப்பிரிக்கா
நாட்டில் வளர்கிறது. ஆறு அடி உயரம்வரை இந்தச்செடி வளரும். தண்டுப்பகுதியில்
கீழே அதிக இலைகளும் மேலே செல்லசெல்ல இலைகள் குறைந்துகொண்டும்
வரும். இலைகள் மொரமொரப்பாகவும் எதிர் எதிராகவும் இருக்கும். அவை
வடக்கும், தெற்குமாகவே எப்போதும் இருக்கும். திசைகாட்டும் கருவியில் உள்ள
காந்தமுள் வடக்கும், தேற்குமாக நின்று திசைகாட்டுவது போல இந்த இலையும்
காட்டுவதால் இந்த செடிக்கு காம்பஸ் என்ற பெயரும் உண்டு.
வினாக்கள் :
4
1. சூரியனை நோக்கித்திரும்பக் காரணமாக இருப்பது எது?
2. சில்பியம் லேசினியேட்டம் என்ற செடி எந்த நாட்டில் இருக்கிறது?
3. சில்பியம் லெசினியேட்டம் செடி எவ்வளவு உயரம் வளரும்?
4. சில்பியம் லெசினியேட்டம் செடியின் இலைகளின் தன்மை யாது?
5. சில்பியம் லெசினியேட்டம் செடிக்குரிய வேறு பெயர் யாது?
Answers
Answered by
3
Answer:
1.சூரியகாந்திப்பூ சூரியனை நோக்கித் திரும்புவதற்கு அந்தப்பூவில் உள்ள
"போட்டோட்ரோபிசம்" என்ற இயக்கம் தான் காரணம்.
2. வட ஆப்பிரிக்கா
3. ஆறு அடி உயரம்
4. இலைகள் மொரமொரப்பாகவும் எதிர் எதிராகவும் இருக்கும்.
5. காம்பஸ்
Explanation:
புத்திசாலியாக தேர்வு செய்யவும்
Similar questions