World Languages, asked by subarni, 4 months ago

ஆற்றுப்படை என்பதன் பொருள் என்ன?​

Answers

Answered by asiraabbas7879
5

Answer:

ஆற்றுப்படை நூலுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது. சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஆற்றுப்படைப் பாடல்கள் உள்ளன. சங்கநூல் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை நூல்கள்.

பிற்காலத்தில் ஆற்றுப்படை நூலைத் தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கலாயினர். இதனைப் பாட்டியல் வகைகளுள் ஒன்றாக்கினர். ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல் என்னும் பொருள் உடையது. விறலியர், பாணர், கூத்தர், பொருநர் என்போர் தமது வறுமையைப் போக்க வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெற்றுச் செல்லும் மேற்கூறிய நால்வகைப் பிரிவினருள் ஒருவன், பரிசு பெறச் செல்லும் இன்னொருவனை வழிப்படுத்தும் முறையில் அமைவதே ஆற்றுப்படை ஆகும். அகவற்பாக்களாக அமையும் இப் பாடல்கள் தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவதாக அமையும்.[1].

Answered by stylishheart24
14

ஆற்றுப்படுத்தும் கூத்தன்,வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து,யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம்,நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.

Similar questions