உங்கள் பகுதியில் பகாசு மருந்து பதளிக்க தவண்டி ேகராட்சி
ஆளணயருக்கு விண்ணப்பம் வளரக
Answers
அனுப்புநர்
சி.சிவா,
22, அன்பு நகர்,
மதுரை.
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி ஆணையர் அலுவலகம்,
மதுரை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: எங்கள் பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டுதல்
சுமார் 500 குடும்பங்கள் உள்ளடக்கியது எங்கள் அன்பு நகர். வளர்ந்து வரும் பகுதிகளில் இதுவும் ஒன்று. சாப்பிட உணவை விளைவிக்கும் விவசாயி முதல் நாட்டைக் காக்கும் இராணுவ வீரர் போன்ற பலதரப்பட்டோர் இப்பகுதியில் வசிக்கின்றோம். ஒரு காலம் தமிழகத்தை உலுக்கிய டெங்கு நோய், தற்போது ஒருவருக்கு இங்கு ஏற்பட்டுள்ளது. 5 மைல் தூரத்தில் இருக்கும் கால்வாயிலிருந்து கொசுக்கள் இங்கே படையெடுக்கின்றன. இந்நகரைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பீதையில் உள்ளனர்.
எனவே தாங்கள் தயை கூர்ந்து, எங்கள் பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, கொசுக்களால் ஏற்படக்கூடிய வேறு நோய்களையும் தடுக்க வேண்டுகிறோம்.
நன்றி
மதுரை, இப்படிக்கு,
22.12.2020. சி.சிவா.
ஊர் மக்கள் கையொப்பம் :
1. ம. இளவரசி
2. ஏ. பூமிநாதன்
3. ரா. மாணிக்கம்
4. சி. சுதா
உறைமேல் முகவரி:
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி ஆணையர் அலுவலகம்,
மதுரை.