World Languages, asked by boomicamurali, 5 months ago

இ) முன்னுரை காலம் பொன் போன்றது திட்டமிடுதல்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் உரிய நேரத்தில் முடித்தல்
இளமையில் கல் எதிர்காலத்திட்டங்கள் வரையறுத்தல்
நல்ல சமூக சிந்தனைகள் நேரத்தின் பயன்பாடுகள்
கடமைகள்
முடிவுரை​

Answers

Answered by ishani2007
30

Answer:

If My answer is right Mark as Brainliest

I hope this answer will help you.

*முன்னுரை*

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது.காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனையாளா்கள்.

நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத் தான் கொடுக்கப்படுகிறது.

*திட்டமிடுதல்*

உங்கள் நேரத்தை திட்டமிட்டு செய்யுங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளா்த்து கொள்ளுங்கள்.நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும்.

*காற்றுள்ள போதே தூற்றிக்கொள்*

வாழ்க்கை என்ற கடிகாரத்திற்கு ஒரு முறை தான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கிரமே நின்று போகுமா அல்லது அதிக காலம் கழித்து நின்றுபோகுமா என்பதை யாரும் கூற இயலாது. தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது.மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள்.

*உரிய நேரத்தில் முடித்தல்*

உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்‌

எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப்போடும் பழக்கம் நல்லதல்ல.

*இளமையில் கல்*

இளமையில் கல், பருவத்தே பயிர் செய்' என்கிற பழமொழியை அனைவரும் உணர வேண்டும். அந்தந்தப் பருவத்தில் அந்தந்த செயலை செய்து முடித்திட வேண்டும்.இளமை பருவம் கல்விக்குரியது. எனவே அப்பருவத்தை மாணவர்கள் வீண் செய்துவிடக் கூடாது. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்று முன்னோர்கள் உரைத்ததை மனதில் கொண்டு கல்வி பயிலவேண்டும்.

*எதிர்கால திட்டங்கள்*

பொழுதுபோக்கு என்ற பெயரில் காலத்தை வீணடிப்பதை குறைத்து கொள்வது நல்லது. ஏனெனில் கடந்து போன காலத்தை அதாவது நேரத்தை விலைக்கு வாங்க முடியாது.

* நொடிப்பொழுது முதல், நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

எதிர்காலத்தை நினைத்து ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நிகழ்காலத்தில் இறந்த காலத்தை நினைத்து கொண்டு எதிர் காலத்தை வீணாக்கி விடாதீர்கள்.

*நேரத்தின் பயன்பாடு*

உங்கள் நேரம் உங்களுக்காகவே.உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள். காலத்தைச் சாியாகப் பயன்படுத்த தொிந்தால் போதும், நீங்கள் வெற்றியின் பாதையில் நேராகச் சென்று கொண்டிருக்கிறீா்கள் என்று நம்பலாம். நேரத்தை சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் இதுவே உங்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரு ஏணியாக உதவும் உதவும்.

*முடிவுரை*

நேரம் பொன் போன்றது 'அழுது புரண்டாலும் அணைதாண்டிய வெள்ளம் மீண்டும்வராது' என்ற சொல்லுக்கேற்ப தவறவிட்ட காலமும் மீண்டும் வராது. இதனை மனதில் நிலை நிறுத்தி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Explanation:

Sister I think this will be the right answer.

Similar questions