இன எழுத்துக்கள் என்றால் என்ன?
Answers
Answer:
இன எழுத்துகள்
ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! நீங்கள், இதுவரை கண்ட, எழுத்துகள் பிறக்கின்ற இடம், அவற்றை ஒலிப்பதற்கான முயற்சி, கால அளவு, பொருள், வடிவம் இவற்றுள் ஏதேனும் ஒரு வகையில் ஒத்துவருவதைக் கொண்டு அவற்றை வகைப்படுத்துவர். அவற்றை இன எழுத்துகள் என்று கூறுவர்.
குறிலெழுத்துகள் சற்று நீண்டு ஒலித்தே நெடில் எழுத்துகளாக மாறுகின்றன. எனவே, ஒவ்வொரு குறிலெழுத்திற்கும் அதற்குரிய நெட்டெழுத்தே இன எழுத்தாகும். ஐ, ஔ ஆகிய இரு நெட்டெழுத்துகளுக்கும் தனியே குற்றெழுத்து இன்மையால் ஐகாரத்திற்கு இகரமும் ஔகாரத்திற்கு உகரமும் இனக் குறில் எழுத்தாகக் கொள்ளப்படும்.
அ- ஆ,ஐ- இ,இ- ஈ,ஔ- உ.உ - ஊ, எ- ஏ, ஒ- ஓ,
வல்லின எழுத்துகளாகிய க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறனுக்கும் மெல்லின எழுத்துகளாகிய ங, ஞ, ண, ந, ம, ன ஆறும் இன எழுத்துகளாகும்.
க - ஙட- ணப- மச- ஞத- நற- ன
ய, ர, ல, வ, ழ, ள - ஆகிய இடையின எழுத்துகள் ஆறும் தனி இனமாகும்.