பெண் கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றிய செய்தி படத்தொகுப்பினை உருவாக்குக
Answers
சோழவந்தான் : சோழவந்தான் தினமலர் வாசகர் வட்ட விழாவில், 'பெண் கல்வி முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டவர் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர்' என புகழாராம் சூட்டப்பட்டது.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாசகர் வட்டம் சார்பில் டி.வி.ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஆலோசகர் மாரியப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை இந்துமதி முன்னிலை வகித்தார். தலைவர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார். சேவை அறிக்கையை துணைசெயலாளர் ரமேஷ் வாசித்தார். மதுரை வீரமாமுனிவர் இலக்கிய வட்ட செயலாளர் ஜான்பெலிக்ஸ்கென்னடி டி.வி.ஆர்., படத்தை திறந்து வைத்தார். வாடிபட்டி கூட்டுறவு வணிக விற்பனை சங்கத் தலைவர் சரவணன் நிகழ்ச்சியை துவக்கினார்.பரவை பேரூராட்சி தலைவர் ராஜா, மாணவர்கள் மற்றும் சேவை செய்தவர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கினார். அவர் பேசுகையில், ''பெண்கள் சமுதாய வளர்ச்சி, பெண் கல்வி முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர் டி.வி.ஆர்., தமிழ்மொழி வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். தினமலர் நாளிதழ் மூலம் நடுநிலை தவறாது அரசின் செயல்பாடுகளை துணிந்து விமர்சித்தவர்,'' என்றார்.டி.வி.ஆர்., நினைவு பரிசை எம்.வி.எம்., கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் வழங்கினார். துணை தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன், நகர் தி.மு.க., நிர்வாகி சிற்றரசு, லயன்ஸ் சங்க நிர்வாகி குமரேசன், போஸ் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தேனுார் லட்சிய இளைஞர் மன்ற நிர்வாகி கார்த்திக்குமரன் தொகுத்து வழங்கினார். வாசகர் வட்ட செயலாளர் பாரூக் நன்றி கூறினார்.