செயற்கை நுண்ணறிவு முதன்மையானது ஏன்
Answers
Explanation:
ழைப்பை அபகரித்த இயந்திரங்கள், தற்போது கணினி நுட்பத்தின் உதவியுடன் மனித மூளையின் உழைப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. கைபேசி முதல் தானியங்கிப் போக்குவரத்துவரை செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை நுகரத் தொடங்கியிருக்கிறோம்.
பணி வாய்ப்பும் உண்டு
புழக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பைப் பறிப்பது நிச்சயம் என்றாலும், அதைவிட அதிகமான பணிவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு வழங்கும் என்கிறது உலக பொருளாதார கூட்டமைப்பு. கல்வி - வேலைவாய்ப்புத் துறையில் இருப்பவர்கள், அதை ஒட்டிய மாற்றங்களுக்கு தயாராவதே முன்னேற்றம் தரும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் எட்டாம் வகுப்பு முதற்கொண்டே செயற்கை நுண்ணறிவைச் சேர்க்க முடிவுசெய்திருக்கிறார்கள். உயர்கல்வித் துறையிலும் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறை மாணவர்கள் நேரடியாகச் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு குறிவைத்து தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம்.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, வேளாண்மைத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை நடை முறைப்படுத்த பரிந்துரைத்துள்ளது. வாகன உற்பத்தி, மென்பொருள், நிதி ஆலோசனை போன்ற தனியார் துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. அனைத்துமே தொடக்க நிலையில் இருப்பதால் செயற்கை நுண்ணறிவின் அடுத்தக் கட்ட வளர்ச்சியை ஆராய்ந்து, அதற்கேற்ப திறன்களை பெருக்கிக்கொள்ளலாம்.
தானியங்கி நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிலைகளில், துணைசெய்யும் நுண்ணறிவு என்பதே பொதுப் பயன்பாட்டில் அதிகம் உள்ளது. இதில் மனித உத்தரவின் நிரல்களுக்குப் பணிந்து, தேவையானது செய்து முடிக்கப்படும். ஒரே மாதிரியான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் இடங்களில் இவற்றின் பயன்பாடு அதிகம். இரண்டாவதாக, விரிவான நுண்ணறிவு என்பதில் மனிதர்களுடன் இணைந்தே பங்காற்றும். மனித மூளையின் நினைவுத்திறன், தர்க்கங்களை அலசுதல் உள்ளிட்டவற்றில் விரைந்து முடிவுகளை வழங்கும்.
மனித மூளையின் அனுபவ அறிவு, உணர்ச்சி ஆகியவற்றைத் தவிர்த்து ஏனைய அனைத்திலும் இயந்திர உதவியை இதன் மூலம் சாத்தியப்படுத்திக்கொள்ளலாம். அடுத்ததாக மனிதர்கள் ஒதுங்கிக்கொள்ள, முழுவதும் இயந்திரங்களே ஆராய்ந்து செயல்படும் தானியங்கி நுண்ணறிவு வருகிறது. தற்போது பரிசோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் தானியங்கி வாகனங்கள் இதற்கு உதாரணம். இவை அனைத்தின் தொகுப்பாக ‘Humanoids’ எனப்படும் மனித மூளையை நகலெடுத்த செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்கள் வரவிருக்கின்றன.
Answer:
நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம். நாம் நினைப்பதை விடவும் வேகமாக இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. உலகில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் விற்பனை செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன. இத்தொழில்நுட்பம் உலகளாவிய வணிகத்துக்கு உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவின் மிகுதியான
வளர்ச்சியால் தரவு அறிவியலாளர்களின்
(Data Scienists) தேவை கூடியுள்ளது.
இயந்திரக் கற்றல் வல்லுநர்கள் முதலான பல
தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவையும்
பெருகிவருகிறது. போட்டி நிறைந்த
இவ்வுலகில் செயற்கை நுண்ணறிவை
யார் முதலாவதாகவும் சரியாகவும்பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வணிக வானம் வசப்படும்!