India Languages, asked by ssri81623, 5 months ago

கீரி பாம்பு மறைந்துள்ள தொகையை கண்டுபிடித்து தொடர் அமைக்க​

Answers

Answered by manuram147
1

Ye konse भाषा h?

mujhe kuch smj nhi aya h?

Answered by zumba12
5

உம்மைத் தொகை

  • 'உம்' என்பது தொக்க தொகை.
  • தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்).
  • அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் 'உம்'மையாகிய உருபு மறைந்து நிற்பது உம்மைத் தொகை எனப்படும்.

  அவ்வளவுகள்

  • எண்ணல்
  • எடுத்தல்
  • முகத்தல்
  • நீட்டல் என்னும் நான்கு ஆகும்.

சான்று:

  • தாய்தந்தை - தாயும் தந்தையும்
  • இரவுபகல் - இரவும் பகலும்
  • கீரி பாம்பு - கீரியும் பாம்பும்

விடை:

 கீரி பாம்பு - உம்மைத் தொகை (கீரியும் பாம்பும்)

தொடர் அமைத்தல்

  • கலாவும் மாலாவும் கீரியும் பாம்பும் போல எப்பொழுதும் பகைமையோடு வாழ்கின்றனர்.
  • ரமாவும் சீதாவும்  வகுப்பில்  எப்போதும் கீரியும் பாம்பும் போல சண்டையிட்டுக் கொள்வார்கள்.
Similar questions