India Languages, asked by biology0702, 5 months ago

நிறழ்நிரை அணி சான்றுடன் விள்ளகுக​

Answers

Answered by ghseggoor536
5

Answer:

அணி :

மக்களுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்களைப் போல செய்யுள்களுக்கு அழகு சேர்க்கக்கூடிய சுவையை அளிப்பது அணிகளாகும் .

நிரல்நிறை அணி :

நிரல் என்பது வரிசை, நிறை என்பது நிறுத்துதல் என்றும் பொருள்படும் .

நிரல்நிறை அணி என்பது ஒரு செய்யுளில் உள்ள சொல்லையும் பொருளையும் மாற்றாமல் அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வதாகும்.

" அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது ".

இக்குறளின் பொருள்:

இல்வாழ்க்கை என்பது அன்பும் அறனும் உடையதாக இருந்தால் அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனுமாக விளங்கும்.

அணி விளக்கம்:

இந்த குறளில் உள்ள அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடுத்தி கூறியுள்ளமையால் இது நிரல் நிறைஅணி

Similar questions