சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலை பற்றி இராச மாணிக்கனாரின் கூற்று யாது
Answers
Explanation:
சங்க காலத்தில் தமிழ் மொழியின் நிலை பற்றி இராச மாணிக்கனாரின் கூற்று
சங்க காலத் தமிழகத்தில் தமிழ் மொழி ஆனது ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக சிறப்புற்று விளங்கி வந்தது.
தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்த அரசியல் சுதந்திரத்தின் காரணமாக, தமிழ் மொழி ஆனது தமிழ் நாடு முழுவதும் சமயம், வாணிகம் முதலிய அனைத்துத் துறைகளிலும் பொது மொழியாக, ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக விளங்கி வந்தது என மா. இராச மாணிக்கனார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சங்க காலத்தில் நிலவிய கல்வி முறையின் சிறப்பினைப் பற்றியும் மா. இராச மாணிக்கனார் கூறியுள்ளார்.
சங்க கால மக்கள் குடும்பம், அரசு, சமூகம் என மூன்று நிலைகளிலும் ஒருவன் சிறப்பு பெற கல்வி தேவை என்பதை உணர்ந்து கல்வி கற்றனர