தொகை நிலைத் தொடர்கள் தொகா நிலைத் தொடர்களை சான்றுடன் விளக்கி எழுதுகிறேன்
Answers
Answer:
உருபுகள் மறைந்து வந்தால் தொகை நிலைத் தொடர்
இல்லனா அது தொகா நிலைத் தொடர்
Answer:
தொகை நிலைத் தொடர்கள்:-
சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் ‘தொகை’ என்பர் இலக்கண நூலார்.
‘தொகை’ ஆறு வகைப்படும். அவை, 1. வேற்றுமைத் தொகை 2. வினைத் தொகை 3. பண்புத் தொகை 4. உவமைத் தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித் தொகை என்பனவாகும்.
தொகா நிலைத் தொடர்கள்:-
'அகிலன் எழுதுகிறான்’. என்னும் இத்தொடரில், அகிலன் என்னும் எழுவாயும், ‘எழுதுகிறான்’ என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று பொருளைத் தருகின்றன. இடையில், சொல்லோ உருபோ எவையும் மறைந்து வரவில்லை.
இவ்வாறு, ஒரு தொடரில் இரு சொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ, உருபோ, மறையாது பொருளை உணர்த்துவது, தொகாநிலைத் தொடர் எனப்படும்.
தொகாநிலைத் தொடர் 1. எழுவாய்த் தொடர், 2. வினைமுற்றுத் தொடர், 3. பெயரெச்சத் தொடர், 4. வினையெச்சத் தொடர், 5. விளித் தொடர், 6. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், 7. இடைச் சொற்றொடர், 8. உரிச் சொற்றொடர், 9. அடுக்குத் தொடர் என ஒன்பது வகைப்படும்.