Environmental Sciences, asked by sripriyabalu475, 5 months ago

இரத்த அழுத்தம் என்றால் என்ன

Answers

Answered by Geethanapoomurugar
2

Answer:

நாம் வாழும் இயந்திரமயமான சூழலில் அனைவரும் பணத்தையும், வசதியான வாழ்க்கையும் தேடி ஓடிக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய சூழலில் சத்தான உணவைத் தவிர்த்துக் கிடைக்கும் துரித உணவுகளை உண்கிறோம். இப்போது இருக்கும் காலத்தில் சத்துள்ள உணவினை தவிர்த்து நம் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்படுகிறோம். இதனால் இப்போது உள்ள இளம் தலைமுறையினர் முதல் முதியவர் வரை மனச்சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகிறோம். இதற்குத் தான் நம் முன்னோர்கள் “சுவர்இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்று கூறி வைத்தனர். எனவே நம் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதோடு சேர்த்து ஆரோக்கியமான உடல் நலத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள வேண்டும். இவ்விரண்டினையும் தவற விட்டவர்கள் சந்திக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம். இந்நோய் முதலில் 40 வயதைக் கடந்த முதியவர்களுக்குத் தான் ஏற்பட்டு வந்தது. ஆனால் இன்று இளம் வயதினரும் கூட உயர்இரத்த அழுத்த நோய்க்குஆளாகின்றனர் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றனர்.

Explanation:

என்னை brainiest என்று கூறிப்பிடுங்கள் .

Answered by Anonymous
6

Answer:

  • இரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது.
  • சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.
  • மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும்.
  • ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை 'ரத்த அழுத்த நோயாளி' எனக் கூறலாம்.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்.

Similar questions