Science, asked by sripriyabalu475, 5 months ago

புகை பிடித்தலால் ஏற்படும் தீய விளைவுகள்

Answers

Answered by Anonymous
1

Answer:

  • புகைப்பதற்கும் மது அருந்துவதற்கும் அடிமையாகிவிட்ட மனிதன் தனது அகால மரணத்துக்கு அழைப்பு விடுக்கின்றான். தனது வீட்டாரையும் தன்னோடு சேர்த்து வாழ்பவர்களையும் கூட தனக்குத் துணையாகச் சாவுக்கு அழைத்துச் செல்கிறான்.
  • தற்செயலாகப் புகையிலையைக் கண்டவர்கள் அதைக் காயவைத்துப் புகைத்துப் பார்த்தபோது உடலிலே ஏற்பட்ட சில மாற்றங்கள் உற்சாகத்தை அளித்ததால் மீண்டும் மீண்டும் புகையிலையைச் சுருட்டிப் புகைத்தனரட அதனால் ஒருவித உற்சாகம் பெற்றனர். அந்தப் புகைத்தல் பழக்கம் நாடெங்கும் பரவி உலகளாவிய ரீதியில் மக்கள் புகைத்தலுக்கு அடிமைப்படும் சாபக்கேட்டை ஏற்படுத்தி இருக்கிறது. நவீன விஞ்ஞான ஆய்வுகள் முன்னேற்றமடையாத காலத்திலே தொடங்கிய இத்தீய பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் தற்காலம் கண்டறியப்பட்டுள்ளன.
  • ஏலவே அபிவிருத்தியடைந்த நாடுகளே புகைத்தலில் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. மத்திய வலய நாடுகளிலுள்ள காலநிலை குளிராக அமைந்ததால், உடம்பைச் சூடாக்கிப் பேணவும், உற்சாகத்தைப் பெறவும் புகைத்தல் பழக்கம் அவர்களுக்கு உதவியது. ஒருவித ஊக்கியாக புகையிலையில் உள்ள சாறும் பயன்பட்டது. எனினும் காலப்போக்கில் மேற்கத்தேய நாடுகளில் புகைத்தலால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் பட்டறி அனுபவங்களாக கண்டறியப்பட்டன. இதனால் மேற்கத்தேய நாடுகள் புகைத்தலினால் ஏற்படும் தீமைகளை ஆய்வு செய்து அறிந்தன.
  • புகைத்தலை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் காரணமாக இந்நாடுகள் புகைத்தலை குறைப்பதற்கும், அடியோடு புகைத்தலை விடுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. புகைக்கும் பழக்கம் மக்களிடையே குறைவடைந்த போது அபரிமிதமாகச் சிகரெட்டை உற்பத்தி செய்து இலாபமீட்டி வந்த சிகரெட் உற்பத்தியாளரின் வருவாய் பாதிக்கப்படவே அக்கம்பனிகள் வளர்முக நாடுகளை நோக்கித் தமது விற்பனையை ஆரம்பித்தன. இதன் காரணமாக ஏதும் அறியாத வளர்முக நாட்டு மக்கள் புகைத்தலுக்கு அடிமையாகித் தமது வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றனர்.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்

Similar questions