India Languages, asked by Mahthimathi41, 5 months ago

மனிதர்கள் தம் தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்

Answers

Answered by tripathiakshita48
0

Answer:

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.

Explanation:

மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.

படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

  1. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.
  2. இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.
  3. சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப் பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.
  4. எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
  5. நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் இன்பப் பெருக்காய்க் கரை கடந்து பொங்கிடும் கடலாக, மேலான பரம் பொருள் விளங்குகின்றது.

மேலான பொருளையும் தம் தீய எண்ணங்களையும் அடியோடு அழித்தவர்கள், மனதில் உள்ளே இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே!

உன் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல் பணத்தின் மீது ஆசை வைத்தால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.

நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்திற்குள் இன்பப்பொருக்காய் கரை கடந்து பொங்கும் கடலாக விளங்கி நிற்கின்றாள்

மேலானபொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள்செய்வாயாக.

கண், செவி, வாய், மூக்கு, மெய் ஆகியன ஐம்பொறிகள் ஆகும்.

  • கண்கள் மூலம் உயிர் இரக்கம் காட்டுதல் வேண்டும்.
  • செவி மூலம் பெரியோர்களின் நற்சொல் கேட்டல் வேண்டும்.
  • வாய்மூலம் துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறியும் இரக்கமான சொற்களையும் கூறுதல் வேண்டும்.
  • மூக்கின் மூலம் எரிவாயு கசிவு உள்ளிட்டவற்றை உணர்ந்து, விபத்திலிருந்து தடுக்க உதவுதல் வேண்டும்.
  • நம் உடல் மூலம் ஏழை எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் உதவுதல் வேண்டும்.

For more related question : https://brainly.in/question/15956977

#SPJ1

Similar questions