பாரம்பரிய உணவு பற்றி கவிதை
Answers
Answered by
0
Answer:
சுத்தமான ஆற்று நீர் எடுத்து
அதில் கம்பு அரிசி ஊற வைத்து
கழுவி காயவைத்து,
உரலில் போட்டு குத்தி
புடைத்தெடுத்து
அந்த கம்பு மாவை தனியே வைத்து
சுண்ட காய்ச்சிய பால் வைத்து
உறை குத்திய தயிர் கடைந்து,
கொழுப்பை பிரித்த மோர் எடுத்து
கொதிக்க வைத்து,வாசனை வர வர....
கம்பு மாவை அதில் போட்டு
கொஞ்சமும் விடாமல் கிண்டிக் கிண்டி
கம்பங்கூளாக்கி
அதை இயற்கை காற்றில்ஆற வைத்து,
அதில் மோர் ஊற்றி கலந்து
அலுமினிய தட்டில் வைத்து
தொட்டுக் கொள்ள
சுட்ட கருவாடு தருவாயே அம்மா
எத்தனை தட்டுகளில்
எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
உணவுகளை
இன்று அடுக்கி வைத்தாலும்
நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
மீண்டும் மீண்டும்
தொண்டை குழிக்குள்
சுற்றி சுழலும்
அந்த கம்பங்கஞ்சியின் வாசனை எங்கே??
எங்கு போய் தேடுவது??
அந்த பாச உணவை??
Similar questions