வனக்கும்
அடிசறுக்கும்.'
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வொடு ஒப்பிடுக
Answers
Answer:
Explanation:அதனால்தான் கல்வியின் பெருமையை விளக்கியே தம் திருக்குறளில் நாற்பதாம் அதிகாரமாக ஒரு தனி அதிகாரத்தைப் படைத்துவிட்டார். அதில் உள்ள பத்துக் குறள்களும் கல்வி கற்றலின் அருமை பெருமைகளை அழகாகப் பேசுகின்றன.
கற்றால் மட்டும் போதுமா? தான் கற்ற கல்வியின் வழி பண்புகளை வளர்த்துக் கொண்டு வாழவேண்டாமா? அப்படி வாழாவிட்டால், பின் கற்ற கல்வியால் என்ன பயன்? எனவே, `கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக!’என்கிற குறளோடு கல்வி என்னும் அதிகாரத்தைத் தொடங்குகிறார்.
கல்வியின் பயன் கற்றல் அல்ல. கற்றபடி நிற்றல். கற்றபடி வாழாத கல்வியாளர்களால் எந்த உபயோகமும் இல்லை என்று ராமகிருஷ்ண பரமஹம்
சரும் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்!
`பஞ்சாங்கத்தில் மழை எப்போது வரும் என்று போட்டிருக்கும். ஆனால், பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒருசொட்டுத் தண்ணீர் கூட வராது!’ பின்பற்றப்படாத வெறும் தகவலறிவு, மனிதர்களிடையே எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தாது. அத்தகைய ஏட்டுக் கல்வி வீண்.
மொழியறிவு மட்டும் போதாது. கணிதம் உள்ளிட்ட அறிவியலறிவும் தேவை என்பது வள்ளுவர் கருத்து. கலை, அறிவியல் இரண்டிற்கும் சம அந்தஸ்து கொடுத்துப் பார்க்கிறது வள்ளுவரின் உள்ளம்.
`எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.’வள்ளுவர் சொல்லும் எண்ணை மனத்தில் எண்ணி, `எண்ணாலான’ கணிதத்திற்கு `என்னாலான’ சேவை செய்வேன் என்று சிறுவயதிலேயே மாபெரும் கணித மேதையாகத் திகழ்ந்தானே ராமானுஜன்? அவன் வாலிப வயதிலேயே மரித்ததற்கு அவனது வறுமையும் ஒரு காரணம் அல்லவா? நாமகிரித் தாயார் மேல் கொண்ட அவனது அளவற்ற பக்தி அவனுக்குக் கணிதச் செல்வத்தை அருளியது. ஆனால், நீண்ட ஆயுளை வழங்கவில்லை.
பாரதியார், விவேகானந்தர், ராமானுஜன் உள்ளிட்ட பல கல்வியறிவு நிறைந்த மாமேதைகள் முப்பத்தைந்து வயதிற்குள்ளாகவே காலமாக நேர்ந்ததைப் பற்றி என்ன சொல்வது? அவர்களின் விதி என்பதா அல்லது இந்த உலகிற்குக் கிட்டிய பாக்கியம் அவ்வளவுதான் எனக் கொள்வதா?`கண்ணுடையர் என்பவர் கற்றோர்முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.’