ஹைக்கூ கவிதையின் தோற்றமும்
வளார்ச்சியும்?
Answers
Answer:
Explanation:
ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில்[1] முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்புகழ் பெற்ற கவிதை வடிவமாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர்.
ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில்தான் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஐக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.
ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் டோக்கியோ காலத்தில் (கி.பி 1863 க்கு அடுத்தது) ஐக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு பிரான்சிய மொழி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் பரவி தமிழிலும் பரவியது.