"சலச வாவியில் செங்கயல் பாயும் " - இடம்
இடம் சுட்டிப் பொருள் விளக்குக
Answers
Answer:
இது என்ன வகுப்பு பாடம் சொல்லுங்கள் please
சலச வாவியில் செங்கயல் பாயும்
இடம் :
பெரியவன் கவிராயர் எழுதிய திருமலை முருகன் பள்ளு என்ற பாடலில் வடகரை நாட்டின் சிறப்பினை கூறும் இடத்தில் சலச வாவியில் செங்கயல் பாயும் என்ற தொடர் இடம் பெற்று உள்ளது.
பொருள் :
தாமரைக் குளத்தில் மீன்கள் பாய்ந்து விளையாடுகின்றன.
விளக்கம் :
வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் ரீங்காரமிடும்.
வண்டின் இசையினை கேட்ட மீனைப் பிடித்து உண்ண வந்த உள்ளான் பறவை வாலை ஆட்டும்.
தாமரைக் குளத்தில் மீன்கள் பாய்ந்து விளையாடும்.
முத்துக்களை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும்.
பெண் பெய் என்றதும் மழை பெய்யும்.
முனிவர்கள் முக்காலம் அறிந்தவர்களாக திகழ்ந்தனர்.
இத்தகைய வடகரை நாட்டில் திருமலை சேவகன் வீற்றிருக்கிறார்.