நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
Answers
Answered by
26
நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது :
அய்யப்ப மாதவன்
➡️கவிஞர் அய்யப்ப மாதவன் அவர்கள் சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையினை சார்ந்தவர் ஆவார்.
➡️இவர் இதழியல் துறை மற்றும் திரைத் துறையை சார்ந்தவர் ஆவார்.
➡️அய்யப்ப மாதவன் அவர்கள் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலிய கவிதை நூல்கள் மற்றும் இன்று என்ற கவிதைக் குறும்படத்தினை வெளியிட்டு உள்ளார்.
பட்டை தீட்டிய வெள்ளை வைரம்
➡️நகரத்தில் உள்ள மாசுகள் பெய்கின்ற மழையினால் அகற்றப்பட்டன.
➡️மழைக் காலமாக இருந்தாலும், திடீரென வெளிப்பட்ட சூரிய வெளிச்சத்தால் நகரமானது புதுப் பொலிவு பெறுகிறது.
➡️இதனையே கவிஞர் நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது என்று கூறுகிறார்.
Similar questions