சுற்றுப்புறச் சூழல் என்றால் என்ன?
Answers
Answered by
26
சுற்றுப்புறச் சூழல் என்றால் என்ன?
சுற்றுச் சூழல்/சுற்றுப்புறச் சூழல்:
மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் அவை;
❆ நிலம்
❆ நீர்
❆ காற்று
❆ ஆகாயம்
❆ நெருப்பு
இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.
சுற்றுச் சுழல் மாசுபாடு என்றால் என்ன?
✯ தொழிற்சாலை கழிவுகள்
✯ ரசாயன திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள்
✯ வாகனங்களின் இறைச்சல்
✯ வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை
✯ மனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், கஞ்சா
✯ பிளாஷ்டிக் மற்றம் பாலித்தீன் பயன்பாடுகள்
✯ மலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல்
✯ மனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல்
✯ இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு
நான்கு வகையான சுற்றுச்சூழல் மாசுபாடு:
✧ நிலம் மாசுபடுததல்
✧ நீர் மாசுபடுதல்
✧ காற்று மாசுபடுதல்
✧ ஆகாயம் மாசுபடுதல்
✪ இதுபோன்ற பெரிய ஆபத்துக்களை இந்தியா தடுக்கவில்லை என்றால், இந்த மாசுபாட்டால் இந்தியா மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளும் மிகவும் பாதிக்கப்படும்
✪ எனவே இனிமேல் ஒவ்வொரு மனிதனும் தங்கள் சூழலுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்
Anonymous:
nice great
Similar questions