கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
இயல்பாகவே தோ ன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும்
இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த
நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள்,
சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும்
அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா
இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த பரிசு.
இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம்
பாதுகாக்க வேண்டும். நாம் தமது தேவைக்கா க மலைகள், காடுகள், விலங்குகள்,
பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை
மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி
வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும்
பாதுகாத்துக்கொள்ள முடியும்.
1. எதனை இயற்கை என்கிறோம்?
2. இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண் டும்?
4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
Answers
Answered by
0
இவ்வினாக்களுக்கு விடை கீழ்காணும் விளக்கத்தில் தெளிவாக உள்ளது
விளக்கம்:
1. இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.
2. ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா ஆகியன இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும்.
3. நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம் இதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது.
புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
4. பத்திக்குப் பொருத்தமான தலைப்பு "இயற்கை" ஆகும்.
Similar questions
India Languages,
3 months ago
Math,
3 months ago
Computer Science,
3 months ago
Math,
6 months ago
Math,
6 months ago
Environmental Sciences,
1 year ago
Math,
1 year ago