பகுபத உறுப்பிலக்கணம்
Answers
Answer:
ʜᴇʀᴇ ɪs ʏᴏᴜʀ ᴀɴsᴡᴇʀ ⬇️
Explanation:
பதம் என்றால் சொல்.
➡️பகுத்தல் - பங்கிடுதல், கூறிடுதல்.
பகுபதம் என்றால் கூறிடப்படக் கூடிய சொல் என்று பொருள்.
➡️தமிழின் முதற்பெரும் இலக்கணமான தொல்காப்பியத்தில் சொல்லை இப்படி பகுக்கும் அமைப்பு நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இதில் வரும் இடைநிலை, விகுதி போன்ற அமைப்புகள் அலசப்பட்டுள்ளன.
பகுபதம் என்ற சொல்லை அலசும் முறையை முன்வைத்தவர் பவணந்தி முனிவர் - இவரது நன்னூல் என்ற இலக்கண நூலே இக்கருத்தை நமக்குத் தருகிறது.
➡️புதிதாகத் தமிழ் கற்பவற்களுக்கு இது ஒரு நல்ல அணுகுமுறையாக அமையும்.
சொற்களை பகுபதம், பகாப்பதம் என்று இரண்டாக வகைப்படுத்தினார் நன்னூலார் (நம்ம பவணந்தி ஐயாதாங்க!)
பிரித்து அலசக் கூடியவை, பிரிக்க இயலதாவை.
‘கண்’ என்ற சொல்லைப் பிரிக்க இயலாது. எனவே இது பகாப்பதம்.
‘கண்டேன்’ என்ற சொல்லைப் பிரிக்கலாம். இது பகுபதம்.
➡️பகுபதங்களின் உறுப்புகள்:
பகுக்கக் கூடியது என்றாலே அதில் உறுப்புகள் இருக்கின்றன என்றுதானே பொருள்.
பகுபதத்தில் இருக்கக் கூடிய உறுப்புகள் 6, அவை:
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம்
➡️ஒரு சொல்லில் இவை அனைத்தும் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் பகுதியும் விகுதியும் பெரும்பான்மை இருக்கும்.
ஒரு எடுத்துக்காட்டோடு இவற்றை விளக்குவோம்:
பகுபதங்கள் பெரும்பான்மையும் வினைமுற்றுகளாக இருக்கும்.
மேலே நான் எடுத்துக்கொண்டுள்ள ‘வந்தனர்’ என்பதும் ஒரு வினைமுற்று.
பால், எண், திணை ஆகிய கூறுகளைத் தெளிவாகக் காட்டும் வினைச்சொல் வினைமுற்று எனப்படும்.
➡️ ‘வந்தனர்’ என்ற சொல்லில் ‘வருதல்’ என்ற செயலும், அது நிகழ்ந்து முடிந்தது என்ற ‘இறந்த கால’மும், அதை நிகழ்த்தியவர் பலர் என்ற எண்ணும், அவர்கள் உயர்திணை மக்கள் என்ற குறிப்பும் வெளிப்படையாக நமக்கு தெரிகிறது.
சரி, பகுபத உறுப்புகளுக்கு வருவோம்:
பகுதி என்பது சொல்லின் அடியாக வேராக இருக்கும் உறுப்பு. இதுவே மூலச்சொல்.
வந்தனர் என்பதில் ‘வா’ என்ற வினைச்சொல் அடிதான் பகுதி. வருதலாகிய செயலை இது குறிக்கிறது.
➡️விகுதி என்பது சொல்லின் இறுதிக் கூறு. தமிழின் வினைமுற்று விகுதிகள் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும்.
இங்கே ‘அர்’ என்ற விகுதி ‘உயர்திணை பலர்பால் விகுதி’ ஆகும். இதனால் வந்தது உயர்திணையாகிய மக்கள், அவர் ஒருவரல்லர் பலர் என்று நாம் தெரிந்துகொள்கிறோம்.
இதுவே, ‘வந்தான்’, ‘வந்தாள்’, ‘வந்தது’ ஆகிய சொற்களில் உள்ள விகுதிகளைப் பார்த்தால் ‘உயர்திணை ஆண்பால் ஒருமை’, ‘உயர்திணை பெண்பால் ஒருமை’, ‘அஃறிணை ஒன்றன்பால்’ ஆகியவற்றைத் தெரிந்துகொள்கிறோம்.