கட்டுரை நாட்டுப்புறக் கைவினைக்கலைகள்
Answers
Answered by
7
- தொழில் சார்ந்த கலைகள் கைவினைக் கலைகள் ஆகும். பெரும்பாலும் இவை கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாடப் பிழைப்புக்காக தங்களுக்கு அருகில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிப்பது ஆகும்.
- மண்பாண்டங்கள் செய்தல், மூங்கில் கூடைகள் வனைதல், பாய் முடைதல், பட்டு நெசவு செய்தல், பிரம்பு பின்னுதல், மண் பொம்மைகள் தயாரித்தல் போன்றவை கிராமப்புறக் கைவினைக் கலைகள் ஆகும்.
- உள்ளூரிலேயே கிடைக்கும் மூங்கில்களைக் கொண்டு வனையப்படும் கூடைகளை குறவர் இன மக்கள் அன்றாடம் விற்பனை செய்வதைக் காணலாம். பொருட்களை சேகரம் செய்து வைக்கவும், பழக்கூடை, பூஜைக்கூடை, விளையாடடுப் பொருட்கள் எனப் பல்வேறு வடிவங்களில் மூங்கில் தயாரிப்பு பிரசித்து பெற்று விளங்குகிறது. நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில் மூங்கில் கூடைகளைப் பயன்படுத்துவது சிறப்பு.
Similar questions