India Languages, asked by nandhini20082008, 3 months ago

சிறுவினா :
உழவுத்தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?​

Answers

Answered by thiraneshrf
2

Answer:

சேரனின் நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்கிறது.

அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளை விடுகின்றன.

முளைத்த விதைகள் செழிப்புடன் வளர தட்டுபாடின்றி மழை பொழிகின்றது.

தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது. செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப் பெற்றிருக்கின்றன.

அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது.

நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஒலி எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சி தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற நாடு புது வருவாயுடன் சிறந்து விளங்குகின்றது.

Similar questions