India Languages, asked by saimithra6, 3 months ago

பொங்கல் திருநாள்
குறித்து ஒரு பக்க அளவில்
கட்டுரை வரைக.​

Answers

Answered by dualgamersmitkar
5

Answer:

Explanation:

அறிமுகம்

தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப் பொங்கல்தான், தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு விழாவாகும். தமிழர்கள், நன்றி செலுத்துவதில் தன்னிகரற்றவர்கள். உழைப்பாளிகளாகிய அவர்கள் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி செலுத்துவதற்காக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

பண்டைய நாள் முதல்

தமிழர்கள், தோன்றிய காலம் முதல், இயற்கையை வழிபட்டு, வணங்கி தாங்கள் வாழ்வதற்கு வளங்களைக் கொடுப்பதால் மகிழ்ச்சியுடன் தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். சங்க காலத்திலேயே, பொங்கல் நோன்பு இருந்ததற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. சங்க காலத்தில், விவசாயமே, மக்களின் தொழிலாக இருந்தது. மண்ணை நம்பியே மக்களுக்கு மும்மாரி மழை தேவை. மழை பெய்தால், பயிர் செழிக்கும். நாடு கொழிக்கும். இதனை மனதில் வைத்துத்தான், தை நோன்பை சங்ககாலப் பெண்கள் கடைபிடித்தார்கள். மார்கழியில் தொடங்கிய நோன்பை, தை முதல் நாள் முடிப்பார்கள். தங்கள் பயிர் செழிக்க உதவிய பகலவனுக்கும், மண்ணுக்கும் (பூமிக்கும்), உழுத கால்நடைகளுக்கும், பால் வழங்கிய பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அனைத்தையும் சுத்தப்படுத்தி, அலங்கரித்து புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். பொங்கல் திருநாள், வேளாண்மையைத் தொடர்புபடுத்தியே நடத்தப்படுகிறது.

"மணிமேகலை" காப்பியத்தில், இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்ட அக்காலத்தில், காவிரி பூம்பட்டினத்தில், மன்னர்கள், மக்களுக்கு முரசறைந்து, பொங்கல் விழா வரவிருப்பதை அறிவிப்பார்கள். அக்காலத்தில் பொங்கல் விழா 28 நாட்கள் வரை நடந்திருக்கிறது. அதாவது 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கு ஏற்ப, ஏறக்குறைய தை மாதம் முழுவதும் கொண்டாடியிருக்கிறார்கள்.

இப்போது போகி, அன்று, பழையனவற்றைக் கழித்து, வீட்டை, தெருவைச் சுத்தப்படுத்துவது போல, அப்போதும் செய்திருக்கின்றனர். அவர்கள் செய்ததைத்தான் காலங்காலமாக கடைப்பிடித்து வருகிறோம். வீதிகளைச் சுத்தப்படுத்தி, புதுமணல் பரப்புவர்.

காவல் தெய்வம், இஷ்டதெய்வம், ஊரின் பொது தெய்வம் என அனைத்துத் தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்தனர். மழைக்கு உரிய தெய்வம் இந்திரன். இந்திர வழிபாட்டால், மாதம் மும்மாரி பொழியும் என்று நம்பினர். உலக உயிருக்கு ஒளி கொடுத்து, ஆதார சுருதியாக இருக்கும் சூரியனை வணங்கி, கொண்டாட்டத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதோடு வாழ்வின் நோக்கம் & மக்களின் பசி, நோய் நீங்க வேண்டும். பகைமை மறைய வேண்டும். உறவுகள் மலர வேண்டும் என்பதுதான்.

ஆடிப்பட்டம் தேடி விதைத்து ஐப்பசியில் மழை பொழிய, உழைப்பால் விளைவித்த நெல்லை மார்கழியில் சேகரித்து, தங்கள் உழைப்பின் பயனை நுகரும் நாளே, தைத் திருநாள். புறநானூறு, ஐந்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித் தொகையில், 'தை'க்கு சிறப்பு தெரிவித்து பாடல்கள் உள்ளன. பொங்கல் திருநாள் தற்போது நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் உலகில் வாழும் பகுதிகளில் எல்லாம் கொண்டாடப்படுகிறது.

போகிப் பண்டிகை

'பழையன கழிதலும், புதியன புகுதலும்' தமிழரின் மரபு. மார்கழி மாதத்தின் இறுதி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுகிறார்கள். அந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்-களைக் கழித்து, வீட்டை சுத்தமாகத் துடைத்து, வர்ணம் தீட்டி, புதுப் பொலிவோடு மாற்றுவார்கள். இப்படிச் செய்யும் மாற்றம், வாழ்வில் ஏற்றம் தரும் என்பது நம்பிக்கை. இதில் பழைய பொருட்களை, தேவையற்றவைகளை தீயிட்டுக் கொளுத்துவது சேர்ந்துவிட்டது. இது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று வலியுறுத்தப்படுவதால் 'போகி கொளுத்துவது' கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இது ஆரோக்கியமான விஷயம். இப்போது 'தூய்மை இந்தியா' நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்நாளிலேயே 'தூய்மை இல்லத்தை தொடங்கி வைத்தவர்கள், அதற்காக ஒரு விழாவினைக் கொண்டாடுபவர்கள் தமிழர்கள் என்பது பெருமைதானே!

தைப் பொங்கல்

தை முதல் நாளில், அதிகாலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, சூரியனை வழிபட்டு வாசலில் கோலமிட்டு, புதுப்பானை வைத்து, புது அரிசியிட்டு, பொங்க வைப்பார்கள். தலைவாழையிலையில், நிறைகுடம் வைத்து, விளக்கேற்றுவர். சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உண்டு. கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், பழங்கள் வைத்து வீட்டில் உள்ள அனைவரும் கூடி நின்று, 'பொங்கலோ... பொங்கல்' என முழக்கம் இடுவர். பின்னர் பொங்கலை எடுத்து சூரியனுக்குப் படைத்து, உற்றார், உறவினர், சுற்றத்தாருக்குக் கொடுத்து, அதன்பின்னே குடும்பத்தார் உண்பார்கள். 'மகிழ்வித்து மகிழ்' என்னும் தமிழனின் பண்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்வு இது.

மாட்டுப் பொங்கல்

தமிழனின் உழவுக்கும், தொழிலுக்கும் உறுதுணையாக இருப்பது ஆவினங்களே, அந்த ஆவினங்களுக்கு நன்றி கூறும் திருநாளாக இது கொண்டாடப்படுகிறது. அதோடு பண்டைய தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் அன்று நடைபெறும். கால்நடைகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அலங்கரித்து, அவைகளுக்கு பொங்கலிட்டு, 'பட்டி பெருக, பால் பானை பொங்க, நோவும், பிணியும் தொழுவோடு போக' என்று முழக்கமிட்டு, மாடு, பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். கிராமத்து வீதிகளில் ஜல், ஜல், சலங்கை ஒலிகளோடு, மாடுகள் உலா வருவது, மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கும். பிற உயிரையும், தன் உயிராக நினைக்கும், உயர், தமிழர் பண்பாடே மாட்டுப் பொங்கல்.

காணும் பொங்கல்

மனிதனை சமூக விலங்கு என்பர். காரணம், மனிதனும் கூடி வாழ்பவன்தான்-. கூடி வாழ்ந்தால், கோடி நன்மை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் தமிழர்கள்.

Similar questions