விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக
Answers
Explanation:
உங்கள் கடிதத்தை நான் பெற்றேன், விளையாட்டு போட்டியில் நீங்கள் முதலிடம் பெற்றீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்றதற்காக நான் உங்களை மிகவும் வாழ்த்துகிறேன், மேலும் நீங்கள் தொடர்ந்து முன்னேறி, அதே வழியில் மகிழ்ச்சியாக இருங்கள் என்று நம்புகிறேன்.
Answer:விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
8, முல்லை வீதி,
முத்தியால்பேட்டை,
புதுவை 3.
10.8.2019
அன்புள்ள நண்பனுக்கு,
உன்னை என்றும் மறவாத நண்பன் மணியன் எழுதும் கடிதம். இங்கு அனைவரும் நலம். உன் அப்பா, அம்மா, தம்பி, தங்கை அனைவரின் நலன் குறித்து எழுதவும்.
உங்கள் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுள் நூறு மீட்டர் ஓட்டப்பந்தையம், உயரம் தாண்டுதல் போட்டி ஆகியவற்றில் நீ முதலிடம் பெற்று வெற்றி பெற்றதை அறிந்து நானும் என் பெற்றோரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம். உனக்கு எங்கள் பாராட்டுகள்.
நீ இன்னும் பயிற்சி எடுத்து, மண்டல அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட வேண்டும்.
அதிக வெற்றிகளைக் குவித்து, நீ படிக்கும் பள்ளிக்கும், உன் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உன்னை வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
அன்புத் தோழன்
அ. மணியன்.
உறைமேல் முகவரி
மு. அறிவழகன்,
10, முத்துத் தெரு,
அடையாறு,
Explanation:
I hope this will help you.