நீ சென்று வந்த சுற்றுலா குறித்து நண்பனுக்கு கடிதம்
Answers
Hi there,
here is your answer,
கடிதம்
33,பெரியார் நகர்,
சமத்துவபுரம்,
கோவை.
23.03.2021.
அன்பு நண்பா,
நான் நலம்.உன் நலமறிய ஆவல். உன் குடும்பத்தார் அனைவரின் நலம் அறிய ஆவல்.
நேற்று முன்தினம் நான் கல்விச் சுற்றுலா சென்றிருந்தேன். அது குறித்து உன்னிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேற்று முன்தினம் தஞ்சாவூரிலுள்ள அரண்மனைக்குச் சென்றேன். எழில் பொங்கும் தஞ்சையின் சிறப்புக்கு அரண்மனையும் முக்கியக் காரணம் என அங்கு சென்ற பின்புதான் எனக்கு புரிந்தது. உயர்ந்தோங்கிய அரண்மனையின் உள்ளே அக்காலக் கலைப் பொருட்கள் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு சிலைகள் பல்வேறு காகாலங்கப் பறைசாற்றுகின்றன. சரசுவதி மகால் புத்தக நிலையத்தின் பல்வேறு ஏடுகள், பல்வேறு கால நூல்கள் காணக் கிடைத்திட்ட பல்வேறு செல்வங்கள், நூல்களை சேர்த்து வைத்த சரபோஜி மன்னர் பாராட்டுக்குரியவர்.
அரண்மனைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள்,கட்டுமானப் பணிகள் ,சிறப்பிற்குரியன . அடுக்கடுக்காக அமைக்கப்பட்ட மாடிகளில் ஒன்றில் வைக்கப்பட்ட திமிலங்கத்தின் எலும்பைக்கூட்டை பார்த்து அதிசயித்தேன். அரண்மனையின் உள்சென்று வெளிவரும் வரை நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கோடை விடுமுறையில் நீ இங்கு வந்தால் நாம் மீண்டும் தஞ்சாவூர் சென்று அரண்மனையைச் சுற்றிப் பார்க்கலாம். நீயும் அடுத்த வாரம் செல்லவுள்ள சுற்றுலா குறித்து எனக்கு எழுத வேண்டும்.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
உனது பெயர்.
உறைமேல் முகவரி:
பெறுநர்
மு. எளங்ஙே,
43/2 சர்தார் வல்லாபாய் படேல் தெரு,
சென்னை - 600054.
Answer:
superb ⚽️♀️⛳⚽️