விமான நிலையத்தில் நான் - கற்பனையாகக் கதை ஒன்றினை
எழுதுக.
Answers
Answer:
சென்னை வந்து உள்நாட்டு விமான நிலையம் செல்ல நடந்து கொண்டு இருந்த போது ஒருவர் [அங்கே பணி புரிபவர் என்று நினைக்கிறேன்] என்னிடம், “உள்நாட்டு விமான நிலையம் செல்கிறீர்களா?” என்றார்.
“ஆமாம்” என்றவுடன் விமானம் பெயரை கேட்டு விட்டு இன்னும் நேரம் இருக்கிறது, தங்க இடம் உள்ளது, புறப்படும் நேரத்தில் உங்களை கொண்டு வந்து விட்டு விடுவார்கள் என்றார் [கட்டணத்துடன் தான்].
இல்லை.. தேவையில்லை நன்றி என்றேன். அவர் மேலும் என்னை தொல்லை செய்யவில்லை. ஓகே சார்! நீங்க இப்படியே நடந்து போனீங்க என்றால் வரும் அதில் இரண்டாவது தளத்தில் உள்ளது என்றார்.நான் இதற்கு முன்பு புதிய உள்நாட்டு முனைமம் சென்றதில்லை என்பதால், இரண்டாவது தளத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொண்டே சென்றேன்.
வருகை இருந்தது புறப்பாடு இல்லை.. அப்படியே நடந்து கொண்டே சென்றேன் கடைசியே வந்து விட்டது. அங்கே இருந்தவரிடம் கேட்ட போது அங்கேயே தாங்க இருக்கு என்றார்.
திரும்ப வந்து பார்த்தால், புறப்பட லிப்ட்டில் சென்று இரண்டாவது தளத்தை அடைய வேண்டும் என்று இருந்தது. நான் கவனிக்கவில்லை போல ஆனால், இதற்கு இன்னும் தெளிவான அறிவிப்பு பலகை வைத்து இருக்க வேண்டும் என்று தோன்றியது.
லிப்ட்டில் சென்று காத்திருப்பு பகுதியில் அமர்ந்து இருந்தேன். எனக்கு விமானத்திற்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் இருந்தது [நள்ளிரவு]. அருகில் இருந்த ஒருவர் அந்தமான் செல்ல இருந்தார், அவருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.
உள்நாட்டு விமான நிலையம் நன்றாக இருந்தது ஆனால், குப்பையை துடைக்காமல் விட்டு இருந்தார்கள். டைல்ஸ் உடைந்து இருந்தது பார்க்க வெறுப்பாக இருந்தது. இங்கே பெட்டியை தள்ளி செல்ல நுழைவு வாயில் அருகே தரை சீராக இல்லை.
இடையிடையே தடைகள் / கார்பெட் இருந்தது பெட்டியை இழுத்து செல்லும் போது தடுமாற வேண்டி இருந்தது.
ஒரு நேபாளி பெண் என்று நினைக்கிறேன், அவர் இழுத்து வந்த ட்ராலி சக்கரம் சரியாக வேலை செய்யாததால் அதை தள்ள கடுமையாக முயற்சித்து அதனுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்சுங்க சோதனை முடிந்து உள்ளே சென்றால், இரு பிரிவாக கேட் இருந்தது. மேலே கேட் 16 – 17 மற்றும் கீழே சென்றால் H 13 – 14 என்று இருந்தது. எதற்கு இப்படி வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரே பெயர் வரிசையிலேயே வைக்கலாமே! கேட் A 1, 2, 3 கேட் B 1,2,3 என்று. நான் வலது புறம் வந்ததால் H 13 க்கு கீழே செல்லும் பகுதியை கவனிக்கவில்லை. பிறகு அங்கே சுற்றி வந்த பிறகு தான் கீழே [Escalator] செல்வதையே பார்த்தேன்.
ஊரிலிருந்து திரும்ப சென்னை வந்து வெளியே செல்ல உள்நாட்டு முனைமம் ரொம்ப எளிதாக இருக்கிறது. புறப்பாடை விட வருகை பகுதி நன்றாக உள்ளது. கன்வேயர் பெல்ட் பகுதியும் நன்றாக உள்ளது.
கோவையில் இருந்து சென்னை வந்து வெளிநாட்டு முனைமம் நோக்கி நடக்க, வழியில் அதே நபர். “சார்! எந்த விமானம்? தங்கி விட்டு செல்கிறீர்களா?” என்று கேட்டார். வேண்டாம் என்று மறுக்க.. “நேரா புது விமான நிலையம் சென்று இரண்டாம் தளத்திற்கு போங்க” என்றார்.
இந்த முறை அவர் மீது எனக்கு மதிப்பு வந்தது. இரு முறையும் நான் கேட்காமலே அவரே விவரங்கள் கூறினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு சென்றேன்.வெளிநாட்டு முனைமத்தில் உள்நாட்டு முனைமம் வடிவமைப்பு போலவே உள்ளது. எந்த மாற்றமும் இல்லை. இங்கேயும் நான்கு மணி நேரம் இருக்க வேண்டி இருந்தது.
இதில் நான் கண்ட கடுப்புகளை கூறியே ஆக வேண்டும் என்பதாலையே இதை எழுதுகிறேன். மேலே கூறியது கூடுதல் தகவல் அவ்வளோ தான்.போர்டிங் பாஸ் போட எந்த விமானம் எந்த வரிசை என்று தெளிவான அறிவிப்பு இல்லை. நாமே தேடிக்கண்டு பிடிக்க வேண்டியதாக உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு மட்டும் தகவல் பலகை இருந்தது. இது ஏர்லைன்ஸ் ஏற்பாடாக இருக்க வேண்டும்.
சுங்க சோதனை முடிந்து, உள்ளே சென்று நான் பார்த்த முதல் அறிவிப்பு தொலைக்காட்சியிலேயே “No Signal” என்று காட்ட செம்ம காண்டாகி விட்டது.
விமான நிலையம் என்பது வெளிநாட்டினரும் வரும் இடம். அவர்களுக்கு நம் மீது வரும் எண்ணம் விமான நிலையைத்திலேயே கடுப்புடன் துவங்கினால் எப்படி இருக்கும்?
அங்கே இருந்த 8 அறிவிப்பு தொலைக்காட்சிகளில் 3-4 வேலை செய்யவில்லை. இதுவே பரவாயில்லை என்கிற அளவில் ஒரு சம்பவம் நடந்ததுகாத்திருந்த போது அறிவிப்பு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்த போது கவனித்தேன், 23.59 க்கு பிறகு ரொம்ப நேரமாக நேரம் மாறவே இல்லை.
இதை நம்பி ஒருத்தன் அமர்ந்து இருந்தால், அவன் நிலை என்ன ஆவது! வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஏற்கனவே நேர மாற்ற குழப்பம் இருக்கும், நேரமே வேலை செய்யவில்லை என்றால் அவர் “நேரம் 7 1/2” ஆகத் தான் இருக்கும்.
நல்லவேளையாக 15 நிமிடத்தில் சரியாகி விட்டது. இடையில் ஒரு ஜப்பான்காரர் அவரது கடிகாரத்தையும் இதையையும் மாறி மாறி பார்த்து குழம்பிக் கொண்டு இருந்தார் .நான் செல்ல வேண்டிய விமானம் கீழ் தளத்தில் [H 13] இருந்ததால், கீழே சென்றேன். ஐந்து நிமிடம் சென்று இருக்கும் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. சர்வர் அறையில் வைத்து பராமரிக்க வேண்டிய குளிரை பயணிகள் பகுதியில் வைத்து இருக்கிறார்கள்
Answer:
10 of the mama what I'm not in Connecticut put it in the blue I'm getting on my electric children I'm the makeup. And do you want and do you want to come get it.
Explanation: