India Languages, asked by rockykathir605, 4 months ago

நூலகம் நோக்கி சுருக்கி எழுதுக​

Answers

Answered by haribaskar1
0

Answer:முன்னுரை :

‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பது முதுமொழி. நம் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்குப் பெரிதும் பயன்படுவது நூலகம்.

நூலகத்தின் வகைகள் :

மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், பகுதி நேர நூலகம், தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றி இக்கட்டுரையில் – காண்போம்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டில் உள்ளது. இது சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் உள்ளது. இது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். இது எட்டு அடுக்குகளைக் கொண்டது.

தரைத்தளம் :

தரைத்தளத்தில் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்களுக்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலிவடிவ நூல்கள் குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படிக்கும் வசதியும் உண்டு. இதுமட்டுமின்றி சொந்த நூல்களைக் கொண்டு சென்று படிப்பதற்கான படிப்பகமும் உண்டு .

முதல் தளம் :

முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் வைக்கப்பட்டுள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

இரண்டாவது தளம் :

இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாக வைக்கப்பட்டுள்ளன. இங்குத் தமிழறிஞர்கள் பலருடைய நூல்கள், பொது அறிவு நூல்கள், கணினி கலைக்களஞ்சியம், சமய நூல்கள், வணிகவியல், சட்டம், தமிழ் அகராதி, இலக்கண நூல்கள் என எண்ணற்ற நூல்கள் உள்ளன.

மூன்றாம் தளம் :

இத்தளங்களில் ஆங்கில நூல்கள் பாடவாரியாக பகுத்து வைக்கப்பட்டுள்ளன. கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள், பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி, கணிதம் அறிவியல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை , திரைப்படக்கலை, வரலாறு, சுற்றுலா பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன. இங்கும் பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

எட்டாம்தளம் :

எட்டாம் தளத்தில் நூலகத்தின் நிர்வாகப் பிரிவு உள்ளது. இந்நூலகத்தின் சிறப்பம்சம். யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது.

முடிவுரை :

இந்நூலகத்தில் அனைத்து வகைப் போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான நூல்கள் உள்ளன. மின் நூலகமும் உள்ளது. அனைத்துத் துறை சார்ந்த தரமான மின் நூல்களும் மின் இதழ்களும் உள்ளன. இந்நூலகத்தை அனைவரும் பயன்படுத்தி அறிவை விரிவு செய்வோம்.

Explanation: வாழ்க தமிழ் வாழ்க இந்தியா pls நன்றாக படிக்கவும் மற்றும் நீங்கள் என்னை ஒரு மூளை பட்டியலில் குறிக்கலாம்

Similar questions