World Languages, asked by hindhumathi2002, 3 months ago

நற்றிணை குறிப்பு வரைக​

Answers

Answered by ravi2303kumar
16

Answer:

நற்றிணை:

  1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  2. நல் என்ற அடைமொழி பெற்றது.
  3. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.
  4. நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
  5. நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 187 புலவர்கள் பாடியுள்ளனர்.
  6. இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது.
  7. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை.
  8. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான்.
  9. இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்களைக் கொண்டது.
  10. குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர்.
  11. மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை.
  12. இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.
  13. திணை அடிப்படையில் பார்க்கும்போது குறிஞ்சித் திணைப் பாடல்கள் 130, பாலைப் பாடல்கள் 107, நெய்தல் படல்கள் 101, மருதப் பாடல்கள் 33, முல்லைப் பாடல்கள் 28 அமைந்துள்ளன.

Answered by ZareenaTabassum
0

விடை:

நற்றிணை:

  • நல் என்ற அடைமொழி பெற்றது.
  • இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
  • நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 187 புலவர்கள் பாடியுள்ளனர்.
  • இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை.
  • இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது.
  • தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான்.
  • இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்களைக் கொண்டது.
  • இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.
  • மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை.
  • திணை அடிப்படையில் பார்க்கும்போது குறிஞ்சித் திணைப் பாடல்கள் 130, பாலைப் பாடல்கள் 107, நெய்தல் படல்கள் 101, மருதப் பாடல்கள் 33, முல்லைப் பாடல்கள் 28 அமைந்துள்ளன.

SPJ2

Similar questions