நல்வாழ்விற்கு தேவையான நற்பண்புகள்
Answers
What is this❓❓❓
Step-by-step explanation:
Which language is this❓❓ I am confused
Answer: நல்வாழ்விற்கு தேவையான நற்பண்புகள்
Step-by-step explanation:வாழ்வில் உங்களை உயர்த்தும் நற்பண்புகள் இவை:
1. வறுமையிலும் உதவி புரியும் மனம்.
வறுமை வாழ்வில் நீங்கள் வாடினாலும், யாரேனும் உதவி கேட்டு வந்தால், உதவி செய்யும் நிலமையில் நீங்கள் இருந்தால், கண்டிப்பாக உங்களால் முடிந்தவாறு உதவிடுங்கள்.
உதவி என்பது பணமாகவும், பொருளாகவும் மட்டும் இருக்க வேண்டியதில்லை. உங்களிடம் உள்ள அறிவாகவும் இருக்கலாம் அல்லது உங்களுக்கே தனித்துவமான திறமையாகவும் இருக்கலாம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் செய்யும் உதவி உங்களை ஏதோ ஒரு வகையில் கட்டாயம் வந்தடையும்.
2. தோல்வியிலும் விடாமுயற்சி.
நீங்கள் வெற்றியை நோக்கி பயணிக்கும் போதெல்லாம் தோல்வி உங்களை அடித்து, உதைத்து கீழே தள்ளிவிடும். உங்களை நெருங்கியவர்களும் உங்களை உதறித் தள்ளி விடுவார்கள். வாழ்க்கை புதைகுழி போல் தோன்றும்.
தோல்வி உங்களை அடித்து, உதைத்து கீழே தள்ளும் பொழுதெல்லாம் மீண்டும் எழுந்து நின்று தோல்விக்கே சவால்விடும் மன வலிமை வேண்டும். தோல்விகளை வாழ்வில் ஒரு பாடமாக மட்டும் எடுத்து ஒவொரு முறையும் விடாமுயற்சியுடன் வெற்றிப்பாதையில் காலடி எடுத்துவையுங்கள். காலப்போக்கில் தோல்வியே உங்களை கண்டு அஞ்சிவிடும்.
3. ஏழ்மையில் நேர்மையும் ஒழுக்கமும்.
ஏழ்மை எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் நேர்மையும் ஒழுக்கமும் ஒருபோதும் தவறிவிடார்த்தீர்கள். நேர்மையையும் ஒழுக்கத்தையும் விற்று கிடைக்கும் செல்வம் உங்களை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடாது.
4. செல்வத்திலும் எளிமை.
நீங்கள் எவ்வளவு செல்வச் செழிப்புடன் பிறந்தாலும் சரி, பிறந்த பின்னர் எவ்வளவு செல்வம் உங்களை தேடிவந்து குவிந்தாலும் சரி, ஆணவமும் கர்வமும் மட்டும் உங்களை ஆட்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆணவமும் கர்வமும் உங்களை அடிமையாக்கும் போது மனிதநேயம் உங்களை விட்டு விலகிவிடும். வாழ்வில் சறுக்கி ஒருமுறை விழுந்தாலும் மீண்டும் எழ முடியாமல் திணறுவீர்கள்.
வாழ்வில் செல்வத்தை விட ஆத்ம திருப்தியில் கிடைக்கும் மன நிம்மதிக்கு முதலிடம் கொடுங்கள். இதைத்தான் இன்று அனைவரும் தொலைத்துவிட்டு அதிகம் தேடுகின்றனர்.