மழை என்ற தலைப்பில் கவிதை எழுதுக
Answers
Explanation:
மரம் இலை துளிர் விட..
என் தேகம் முழுவதும் நனைத்திட..
வானின் கரு மேகங்களே
இடி மின்னலுடன் போர் புரிந்து
உங்கள் வியர்வை துளிகளை
சிந்துங்கள்.
அதுவரை அவளை அழகி
என்றே நினைத்தேன்..
மழை தான் அவளை பேரழகியாக
எனக்கு அடையாளம் காட்டியது.
துளி துளியாய் துடிப்புடன் துள்ளி
மகிழ்ந்தாடி வரும் மழையே..
வருக.. வருக.!
மழையில் நனைவது அழகு..
மழையின் இடையே
வெயில் பேரழகு.
மழையில் குழந்தையின்
காதித கப்பல் அழகோ அழகு.
இறைவனை நேரில்
காண முடியவில்லையே என்று
கலங்கும் கண்களுக்கு
கண்ணீரை துடைக்க அந்த இறைவனால்
அனுப்பப்பட்ட தூதுவனே மழை.!
பூமியில் பொழியும் மழை
மரங்களுக்கு எல்லாம் தாய்ப்பால்.
எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்
மழை மட்டும் தன் குழந்தைக்கு
பால் ஊட்ட மறப்பதில்லை.
மழைக்கு பின் மண் வாசனை
அற்புதமான அழகு.
அடுத்த நாள் பெய்யும் மழையும்
அதனினும் அழகு.
மழை இரவின் குளிர்
அழகிற்கே அழகு.
கூரை இல்லாமல் போனதே
தெருவில் உன்னால் நனைந்தபடி
சிலிர்க்கிறேன் சளிக்கிறேன்.
நீ முத்தமிட்டதால் ஈரமானது
என் இதழ் மட்டுமல்ல
உடலோடு உயிரும் மெல்ல.
மழைத்துளி நிலத்தின்
மேனியில் படர மண்ணும்
மணமாய் மாறியதே..
தித்திக்கும் குளிர் கொஞ்சம்
தென்றல் காற்றின் ஈரம் என்னை
உரசி செல்லுதே.!
இலவசமாய் கிடைப்பதனால்
பலபேருக்கு உன்னை மதிப்பதில்லை.
அலட்சியமாய் இருந்து விட்டு
ஒரு சில மாதங்களிலே உன்னை
வேண்டி காத்திருக்கிறார்கள்.
முத்துக்களாய் இலையின்
நுனியில் இருக்கும் நீர்துளியை
தீண்டுதே என் விரலும் மெதுவாய்..
மழைக்கு ஒதுங்கும் சனங்கள் நடுவே
மயிலாய் மாறுதே என் மனமும்
இங்கே ஆடிப்பாட..!
மழையே அளவாய் அவ்வப்போது
பெய்திடு ஆசையாய்
உன்னை பார்க்கும் மக்களை
மகிழ வைத்திடு.
மழை மீது நான் கொண்ட காதலால்
பொறாமை கொண்ட இடியும்
கொஞ்சம் சத்தம் போடுதே..!
நீ இல்லாத இடத்தில்
கருகி போயின விவசாயம்..
நீ வந்த இடத்தில் மூழ்கி போயின
விவசாயம்.. காரணம்
நீ மழை அல்ல பிழை.
- சம்யுக்தா.பி
it is my own poem if you like poem please mark as brilliant answer