வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறியவர் யார்
Answers
Answer:
dinamalar telegram
Advertisement
HomeHome
பொது
PrevNext
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்: இன்று வள்ளலார் பிறந்த நாள்
பதிவு செய்த நாள்: அக் 04,2014 23:41
Home 10
Share
Tamil News
''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”
என்னும் மகாமந்திரத்தினை ஆன்மிக உலகிற்கு அருளிய வள்ளலார் அவதாரம் செய்த ஊர் சிதம்பரம் அருகே மருதூர்; பிறந்த நாள் 05.10.1823. வள்ளலார் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது தந்தையார் மறைந்து விட்டார். வள்ளலாரின் மூத்த அண்ணன் சபாபதி புராணச் சொற்பொழிவு செய்து இவரை படிக்க வைத்தார். வள்ளலாருக்குப் படிப்பினில் மனம் பற்றிடவில்லை. பாடம் பயின்று வரும் போதே சென்னையில் உள்ள கந்தசாமி கோவிலுக்குச் சென்றார். அண்ணன் மனம் வருந்தி மனைவியிடம் 'இனி, தம்பிக்கு உணவு தர வேண்டாம்' என்றார்; அண்ணியாரோ, கணவருக்குத் தெரியாமல் பொழுது சாய்ந்த வேளையில் வீட்டின் பின்பக்கம் வரச்சொல்லி வள்ளலாருக்கு உணவு அளித்தார். அழுது கொண்டே அண்ணியார் உணவளித்ததைக் கண்ட வள்ளலார், மனம் மாறி இனி ஒரு தனியறையில் படிப்பதாகக் கூறினார்; வீட்டு மாடியில் கண்ணாடி, மலர், கற்பூரம் முதலியவற்றுடன் சென்று, முருகப் பெருமானை ஆழ்ந்து எண்ணிக் கண்ணீர் மல்கக் கசிந்து உருகினார்; எல்லாக் கல்வியையும் இறைவன் உள்முகத்தில் வள்ளலாருக்கு உணர்த்தினான். எனவே, வள்ளலார் அனைத்தையும் ஓதாமல் உணர்ந்தார்; முழுமையான ஞானம் பெற்றார்.
by TaboolaSponsored Links
Remember Cheryl Tiegs: This Is How She Looks Now
Do It Houses
வேண்டும், வேண்டும்:
'கருவிலே திரு' வாய்க்கப் பெற்றவர் வள்ளலார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சி: ஒன்பது வயதில் அவரது ஆசிரியர், ''ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம், மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம், வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்” என்று வகுப்பில் 'உலக நீதி'யைச் சொல்லச் சொல்லியும், அவர் சொல்லவில்லை. "ஏன் சொல்லவில்லை?” என்று ஆசிரியர் கேட்ட போது, "இறைவனிடத்திலே 'வேண்டாம், வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டிருப்பானேன்? ஏதாவது 'வேண்டும், வேண்டும்' என்று எதை வேண்டலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றார். "நீ வேண்டுமானால் 'வேண்டும், வேண்டும்' எனப் பாடு!” என்று ஆசிரியர் கட்டளை இட, உடனே "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற பாடலைப் பாடினார் வள்ளலார்.
முதல் சொற்பொழிவு:
உடல்நலக் குறைவு காரணமாக அண்ணனால் சொற்பொழிவு ஆற்றச் செல்ல முடியவில்லை; தம்பியை அனுப்பி வைத்தார். பெரியபுராணத்தின் ஒரு பாடலை மூன்று மணி நேரம் விரிவுரை ஆற்றினார். சொற்பொழிவைக் கேட்டோர், 'மிகவும் அருமை; இவரே தொடர்ந்து சொற்பொழிவு ஆற்ற வேண்டும்' என்று பாராட்டிக் கூறினர். அண்ணன் சபாபதி, படிக்காத தம்பிக்கு இந்த ஆற்றல் எப்படி வந்தது என்று எண்ணி வியந்தார்; வள்ளலாரின் சொற்பொழிவை மறைந்து நின்று கேட்ட பொழுது, 'முருகப் பெருமான் தான் நமக்குத் தம்பியாக வந்துள்ளார்' என்ற முடிவுக்கு வந்தார். ஒன்பதாவது வயதில் இறைவன் வள்ளலாரை ஆட்கொண்டான்; பன்னிரண்டாம் வயதில் அவர் முறையான ஞான வாழ்க்கையைத் தொடங்கினார்.