விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நாலின் பெயரைக் கண்டுபிடிக்க. இ - குபறவையிடம் இருப்பது) கு - தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்) ஆ - கா (தங்கைக்கு மூத்தவன்)
Answers
Answer:
நிறம் (Colour) அல்லது வண்ணம் என்பது சிவப்பு, மஞ்சள், ஊதா, அல்லது நீலம் போன்ற வண்ண வகைகளால் விவரிக்கப்படும் மனிதனின் காட்சிப் புலனுணர்வுகளின் சிறப்பம்சமாகும். ஒளிநிறமாலையில் உள்ள மின்காந்தக் கதிர்வீச்சால் மனிதக் கண்களில் உள்ள கூம்பு செல்கள் தூண்டப்படுவதால் நிறங்கள் உணரப்படுகின்றன. நிறங்களின் பிரிவுகள் மற்றும் நிறங்களின் குறிப்பிட்ட உட் கூறுகள் போன்றவை பொருட்களின் மீது பட்டு அவை எதிரொளிக்கும் ஒளியின் அலைநீளத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. பொருட்களின் இயற்பியல் பண்புகளான ஒளி உறிஞ்சுதல், உமிழ்வு நிறமாலை போன்ற பண்புகள் இந்த எதிரொளிப்பை நிர்வகிக்கின்றன. நிறங்களின் இடைவெளியை வரையறுப்பதன் மூலம் ஆயத்தொலைவுகளால் எண்ணளவில் நிறங்களை அடையாளம் காண முடியும். உதாரணமாக, சிவப்பு பச்சை நீல நிறங்களின் வண்ண இடைவெளியானது, மனிதக் கண்களின் திரிபுராமைக்கு ஏற்றவாறு அவற்றிலுள்ள மூன்று கூம்பு செல் வகைகளும் மூன்று ஒளிப்பட்டைகளுக்கு எவ்வாறு தூண்டல்களை விளைவிக்கின்றன என்பதனை பிரதிபலிக்கிறது. நீண்ட அலைநீளம் 564-580 நானோ மீட்டர் (சிவப்பு) ; நடுத்தர அலைநீளம், 534-545 நானோ மீட்டர் (பச்சை); 420-440 நானோ மீட்டர் (நீலம்) குறுகிய-அலைநீளம் கொண்ட ஒளி போன்றவை அலை நீளவகைபாடுகளாகும்
பிற வண்ண இடைவெளிகளில் மூவண்ண பரிமானங்களுக்கும் மேற்பட்ட மயில்நீலம், மெசந்தா, மஞ்சள், கருப்பு போன்ற நிற மாதிரிகளும் உள்ளன. மற்ற உயிரினக் கண்களின் ஒளியேற்பும் நம்முடைய கண்களின் ஒளியேற்பில் இருந்து வேறுபடுகின்றன. அதனால் வேறுபட்ட நிற வேறுபாடுகளும் காட்சிப் புலனுணர்வும் அவ்வுயிரினங்களில் மாறுபடும். உதாரணமாக தேனீக்கள் போன்ற சில உயிரினங்கள் புற ஊதா கதிர்வீச்சை உணர்கின்றன. புற ஊதா நிறத்தின் அலைநீளம் 10 நானோமீட்டரிலிருந்து 400 நானோமீட்டர் வரையாகும். இது கட்புலனாகும் ஒளியைவிட அலைநீளம் குறைவாகவும் ஆனால் எக்சு-கதிர்களைக் காட்டிலும் நீண்டும் இருக்கும். ஆனால் சிவப்பு நிறத்தை இவற்றால் உணர முடியாது. பேபிலியோ வகை பட்டாம்பூச்சிகள் ஆறு வகையான ஒளியேற்பிகளைக் கொண்டிருக்கின்றன, இதனால் இவை ஐவண்ண பார்வைத் திறனைக் கொண்டிருக்கின்றன[3]. இவற்றைத் தவிர சில உயிரினங்கள் கூட்டு வண்ணப்பார்வைத் திறனையும் கொண்டுள்ளன. இவற்றில் 12 வகையான ஒளியேற்பிகள் காணப்படுகின்றன
வண்ணங்களின் விஞ்ஞானம் சில நேரங்களில் நிறவியல், நிற அளவியல், அல்லது வெறுமனே வண்ண அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. மனித கண் மற்றும் மூளை எவ்வாறு நிறத்தை உணர்கிறது, பொருள்களில் வண்ணத்தின் தோற்றம், கலையில் வண்னத்தின் கோட்பாடு மற்றும் காணக்கூடிய வரம்பில் மின்காந்தவியல் கதிர்வீச்சின் இயற்பியல் போன்றவற்றைக் குறிக்கிறது. மேலும் நிறம் என்பது, ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது எதிரொளிக்கப்படும் ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும்.
புவியைப் பொறுத்தவரை சூரியனே ஒளியின் முதன்மையான மூலம் ஆகும். சூரிய ஒளி வெள்ளை நிறமாகக் காணப்பட்டாலும், அது ஏழு நிறங்களின் கலவை ஆகும். இயற்கையில் வானவில் தோன்றும் போது இந்த ஏழு நிறங்களும் பிரிவடைந்து தோன்றுவதைக் காணமுடியும். பட்டகத்தின் ஊடாக வெள்ளொளியைச் செலுத்தி இதே விளைவைப் பெறமுடியும்.