சார்பெழுத்துகள் என்றால் என்ன?
Answers
Answer:
சார்பெழுத்துகள்:
எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள் கூட்டியும் எழுதப்படும்.
இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை முன்னோர் சார்பெழுத்து என்றனர்.
அவை,
உயிர்மெய்
க்+அ=க தொடக்கத்தன
ஆய்தம்
எஃகு தொடக்கத்தன முற்றாய்தம்
உயிரளபெடை
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை தொடக்கத்தன
ஒற்றளபெடை
கண்ண் தண்ண் எனக் கண்டும் கேட்டும் தொடக்கத்தன
குற்றியலிகரம்
நாகு+யாது=நாகியாது தொடக்கத்தன
குற்றியலுகரம்
நாகு அன்று தொடக்கத்தன
ஐகாரக் குறுக்கம்
ஐப்பசி, வலையன், குவளை
ஔகாரக் குறுக்கம்
ஔவை என்பதை அவ்வை என ஒலிக்கும்போது ஔகாரக்குறுக்கம்
மகரக் குறுக்கம்
வரும்வருவாய்
ஆய்தக் குறுக்கம்
அஃகடிய (அவை கடிய)
Answer:
ஒரு முதல் எழுத்தின் பின் மற்ற எழுத்துகள் முதல் எழுத்தை சார்ந்து வரக்கூடியது சார்பாயெழுத்துகள் ஆகும்.