ங்கள் கருத்துக்களை கட்டத்தில் எழுதுக
பல்லவ வம்சாவளி
சாளுக்கிய அரசர்கள்
பல்லவ அரசர்களின் பெயர்கள்
பல்லவ கட்டடக்கலையின் பாணிகள்
சாளுக்கியர்கால கல்வெட்டுக்கள்
பட்டடக்கல் பற்றி குறிப்புகள்
எலிபெண்டா தீவு
ராஷ்டிரகூட அரசர்கள்
இணைப்புப் பாடப் பயிற்சிக் கட்டகம் * ஏழாம் வகுப்பு (விடை
Answers
Explanation:
பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 275 முதல் கி.பி. 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்.[1] சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.[2][3][4] போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர்